தீபாவளிக்கு முந்தைய நாளில் சோகம்! கடலூர் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 5 பேர் படுகாயம்
கடலூர்: கடலூரில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அப்பகுதியில் கூட்டம் அதிகம் இருந்த நிலையில், கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட் பகுதியில் இன்று மாலை தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்ததால் கூட்டம் அதிகமாக இருந்து. இந்நிலையில் அங்கு உள்ள ஓரு டீக்கடையில் பலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கடையிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிறியது. இதில் கடையில் வேலை செய்த ஊழியர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களும் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கேஸ் சிலிண்டர் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூர் பேருந்து நிலையம் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில் அதிக கூட்டம் இருந்த நேரத்தில் இந்த சிலிண்டர் வெடிப்பு விபத்து ஏற்பட்டதால் கடலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications