கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒட்டடை அறை! ஸ்டேசனில் பெண் எஸ்ஐக்கு ’டார்ச்சர்’! ஆய்வாளருக்கு எதிராக பறந்த புகார்! கலகலத்த கடலூர்!

Google Oneindia Tamil News

கடலூர் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆலடி காவல் பெண் உதவி ஆய்வாளருக்கு டார்ச்சர் கொடுத்த இன்ஸ்பெக்டரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நெய்வேலி உட்கோட்டம் நெய்வேலி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வருபவர் ஆதி. இவர் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு விருத்தாசலம் உட்கோட்டம் ஆலடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிற விஜயகுமார் ஆதியை திட்டுவதும் இரட்டை அர்த்தங்களில் பேசுவதுமாக இருந்து வருவதாக உதவி ஆய்வாளர் ஆதி சென்னை தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்

 ரூ. 8 லட்சம் ஆண்டு வருமானம்.. 5 ஏக்கர் நிலம்! 10% இட ஒதுக்கீடு பெற கட்டுப்பாடுகள் என்னென்ன ரூ. 8 லட்சம் ஆண்டு வருமானம்.. 5 ஏக்கர் நிலம்! 10% இட ஒதுக்கீடு பெற கட்டுப்பாடுகள் என்னென்ன

பெண் ஆய்வாளர்

பெண் ஆய்வாளர்

மேலும் ஆய்வாளர் விஜயகுமார் உதவி ஆய்வாளர் ஆதிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் குளவி கூடு கட்டியும், ஒட்டடை படிந்தும், கழிவறை பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் அசுத்தமாக இருந்தாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த அறையில் சந்தேக நபர்களுக்கு கைரேகை எடுக்கும் பகுதியாகவும், ஆண் காவலர்கள் உடைகள் மற்றும் காவலர்கள் ஷூ, உடைகள் வைத்திருக்கும் அறையாகவும் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

டார்ச்சர்

டார்ச்சர்

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நான் எப்படி அங்கு உட்கார்ந்து வேலை செய்வது என கேட்டபோது மிரட்டும் தொனியில் ஆய்வாளர் விஜயகுமார் அசிங்கமாகவும் ஆவேசமாகவும் திட்டி என்னை அழைத்து டார்ச்சர் செய்தார். இது பற்றி உதவி ஆய்வாளர் ஆதி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

மேலும் சென்னை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த புகார் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 12 வாரங்களுக்குள் இந்த புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காவல்துறை துணைத் தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விசாரணை தொடக்கம்

விசாரணை தொடக்கம்

கடந்த 4-ம் தேதி முதல் கட்ட விசாரணையை கடலூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் தொடங்கியுள்ளது இதில் கலந்துகொண்ட காவல் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவல் உதவியாளர் ஆதி ஆகியோர் தங்கள் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகின்றனர். காவல் பெண் உதவி ஆய்வாளருக்கு டார்ச்சர் கொடுத்த இன்ஸ்பெக்டரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The High Court has ordered to investigate the inspector who gave torture to a female assistant inspector of Aladi police near Vrudhachalam in Cuddalore district, which has created a lot of shocks in the police area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X