கடலூரில் ரயில் பள்ளி வேன் மீது மோதியது எப்படி.. கேட் கீப்பர் vs டிரைவர்.. அஜாக்கிரதை காரணமா?
கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் வாகனங்கள் வரும் போது தடுத்து நிறுத்துவதற்காக கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஏன் அந்த நேரத்தில் கேட் போடவில்லை? கேட் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லையா என்ற கேள்விகள் உள்ளது. அதேபோல் பள்ளி வேன் டிரைவர் அஜாக்கிரதையாக சென்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது இன்று காலை திருச்செந்தூரில் இருந்து சென்னை வந்த ரயில் மோதிய விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பொதுவாக இந்த பகுதியை பொறுத்தவரை ரயில்வே கேட்டை பொறுத்தவரை தினமும் சுமார் 15 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன் சென்னை- தஞ்சாவூர் இடையேயான மெயின் வழித்தடம் என்பதால் பிரதான வழித்தடம் என்பதால் சரக்கு ரயில்களும் வந்து செல்லும்.

செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், சரக்கு வாகனங்கள் பல கடந்து செல்கிறார்கள்.
அப்படித்தான் இன்று காலை தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், கண் இமைக்கும் நேரத்தில் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. பள்ளி வேன், ரயில்வே தண்டாவளத்தில் தள்ளி போய் விழுந்தது. இந்த விபத்தில் 2மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
விபத்து நடந்த இடம் ஆள் இல்லாத ரயில்வே கேட் கிடையாது என்று சொல்கிறார்கள். ஏனெனில் அங்கு ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் ரயில் வரும் நேரத்தில் போடப்படவில்லை.. அதனால் ரயில் வராது என்று நினைத்து பள்ளி வேனை வாகன ஓட்டுநர் ஓட்டினார் என்று சொல்கிறார்கள். பொதுவாக ரயில்கள் வரும் நேரம் என்பது, அந்த பகுதியில் தினசரி ஓட்டுவோருக்கு தெரியும்.. அப்படி இருக்கையில் எப்படி டிரைவர் அலட்சியமாக ரயில்வே கேட்டை கடந்தார் என்றும் கேள்வி வருகிறது. கேட் கீப்பர் கேட் போட வேண்டிய நேரத்தில் கேட் போடாமல் என்ன செய்தார் என்றும் கேள்விகள் எழுகிறது.இந்த விவகாரத்தில் ரயில்வே உரிய விசாரணை நடத்தி கேட் கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விபத்தால் செம்மங்குப்பம் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications