ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் மரண வழக்கு.. சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல்!
கூடலூர்: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோட எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணா பகதூர் என்ற மற்றொரு காவலாளியின் கை, கால்களை கட்டிப் போட்டு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணிபுரிந்த கனகராஜ் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

தீவிர விசாரணை
மற்றொரு நபரான சயான் என்பவரும் கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். எஸ்டேட்டில் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வந்த நடுஹட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். கொடநாடு எஸ்டேட், கொலை, கொள்ளை வழக்கு கூடுதல் விசாரணை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஊட்டியிலுள்ள பழைய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது செய்தனர்
கனகராஜ் வாகன விபத்தில் இறந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் சேலத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொடநாடு கொள்ளை சம்பவம் நடைபெறும் முன்பே கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேசுக்கு தகவல் தெரிந்தும் காவல் துறையினரின் விசாரணையின் போது மறைத்துள்ளனர்.சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனி படை போலீசார் கடந்த 25-ந் தேதி கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டனர்
கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேஷை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர் அவர்கள் இருவரையும் நவம்பர் 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 26 ந்தேதி மனுதாக்கல் செய்திருந்தனர்.

5 நாட்கள் போலீஸ் காவல்
கனகராஜின் சகோதரர் தனபாலை மட்டும் கூடலூர் கிளை சிறையிலிருந்து தனிப்படை போலீசார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிகேட்ட நிலையில் 5 நாட்கள் மட்டும் விசாரணை நடத்த நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய தனிப்படை போலீசார் தனபாலை அழைத்து சென்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications