தாலியின் ஈரம் கூட காயவில்லை.. வெறும் 15 நாளில்.. கடலூரே கலங்கிடுச்சு.. சடலமான புதுமாப்பிள்ளை!
கடலூர்: எதிரிக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்று சொல்வார்களே அது இதுதான்.. திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவியை பறிகொடுப்பதோ, மனைவி கணவனை பறிகொடுப்பதோ மிகவும் மோசமான விஷயம். கடலூரில் நடந்திருக்கிறது.
கடலூரில் கல்யாணம் ஆகி 15 நாட்கள் ஆகி இருந்த நிலையில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்காக மனைவி ஆசையோடு காத்திருந்த நிலையில், புதுமாப்பிள்ளை சடலமாகவே வீட்டிற்கு வந்துள்ளார். எப்படி இப்படியான நிலை ஏற்பட்டது என்பதை பார்ப்போம்.
கடலூர் மாவட்டம் கெங்கநாயக்கன்குப்பத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தனியார் செல்போன கம்பெனியில் கேபிள் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரவீனா என்பவருக்கு கடந்த ஜுன் 1ம் தேதி தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மகிழ்ச்சியோடும், கனவுகளோடும் வாழ்க்கையை தொடங்கிய விமல்ராஜ் ரவீனா அந்த தம்பதிக்கு அடுத்த இரண்டு வாரத்தில் நடக்க போகும் அசம்பாவிதம் தெரியாது.

மகிழ்ச்சியான கழிந்த நாட்களுக்கு மத்தியில் வந்தது மோசமான நாள். ஆம். உயிரைபறிக்க எமன் காத்திருக்கிறான் என்பது அவர்களுக்கு தெரியாது. திருமணம் ஆன புதிது என்பதால் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை நடத்த பெற்றோர் முடிவு செய்திருந்தனர்
இந்நிலையில் வேலைக்கு சென்றிருந்த விமல் ராஜ், வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடுவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு பிணமாகவே வந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த புதுப்பெண் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
எப்படி இறந்தார் விமல்ராஜ்: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஒரு வீட்டில் இண்டர்நெட் வேலை செய்யவில்லை என்று அழைப்பு வந்துள்ளது. அவரும் சரி செய்வதற்காக அங்கு சென்றுள்ளார். மாடியில் கேபிளில் ஏதோ வயர் கட்டாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கேபிளை தொட்டு பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை அங்கு மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் பட்டுவிட்டது. அடுத்த நொடியே மின்சாரம் தாக்கியதில் மாடியில் இருந்து விமல்ராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கடலூர் அருகே இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் பகுதியில் நேற்று திடீரென்று மின்தடை ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மின் ஊழியர் யுவராஜ்க்கு தகவல் அளித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து யுவராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்தடையை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக திடீரென்று மின் ஊழியர் யுவராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி தரையில் வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்தவரை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications