திமுக கூட்டணியில் எந்த கட்சியும் வெளியேறாது.. பாஜகவின் கவலை அதுதான்.. திருமாவளவன் திட்டவட்டம்!
கடலூர்: திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே கூடுதல் தொகுதிகளை பெற முயற்சிப்போம் என்று கூறிய திருமாவளவன், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முடியவில்லை என்ற கவலை பாஜகவிற்கு இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியது. அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டதில் இருந்தே, பாஜகவின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. ஏற்கனவே மதுரைக்கு அமித் ஷா வந்த போதே பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்ததாக மதுரையில் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது.

இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறி இருக்கிறார். குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று கூறி இருக்கின்றனர்.
இதனால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு பண்படுத்தப்பட்ட மண். முருக பக்தர்களாக இருந்தாலும், அவர்கள் மதச்சார்பற்றவர்களாக தான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்ட முடியாது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதலாக இடம் கேட்போம். யாரும் 6 தொகுதிகள் போதும் என்று சொல்லப் போவதில்லை. அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசிக்கும் போது, வெற்றியை கருத்தில் கொண்டு சூழலை புரிந்து கொண்டு முடிவு எடுப்போம். நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருப்போம்.
திமுக கூட்டணியில் இருந்து கூடுதல் இடங்களை பெற முயற்சிப்போம். எல்.முருகனின் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காக சொல்லப்பட்டது. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. பாஜகவை பொறுத்தவரை திமுக கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை என்ற கவலை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி காரணமாக திமுக ஆட்சிய் அமைக்கும் வாய்ப்பை இழந்தது. அதன்பின் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து திமுக கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான போக்கை கடைபிடித்து வருகிறது. அப்போது முதலே காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, முஸ்லீம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இணக்கமாக பயணித்து வருகின்றன. இதனால் திமுக சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications