வண்டிய நிறுத்துங்க.. உற்றுப் பார்த்த அன்புமணி! ‘அவர்’ படம்! ஆச்சரியத்தில் மூழ்கிய சேத்தியாதோப்பு!
கடலூர் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தொண்டர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்கு திடீரென வருகை தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது பாமகவினரால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாமக தலைவராக பொறுப்பேற்ற மருத்துவர் அன்புமணி முதல்முறையாக கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
காலையில் சிதம்பரத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டவர், பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டிய இடத்தினை பார்வையிட்டார்.

நிர்வாகி இல்ல நிகழ்ச்சி
சிதம்பரத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் காடுவெட்டியை நோக்கி புறப்பட்டார். அப்போது செல்லும் வழியில் சேத்தியாதோப்பு அருகே தீப்பாய்ந்த நாச்சியார் கோயில் எதிர்புறம் உள்ள மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா ஒன்று நடைபெற்றது.

பாமக பேனர்
அங்கு பெரிய அளவில் கட்சி பேனர் இருந்ததை பார்த்ததும் வண்டியை நிறுத்தினர். மற்றொரு வாகனத்திலிருந்த பாமக பிரமுகர் மழவராயநல்லூர் வரதராஜன் ஓடிவந்து, 'அண்ணா நம்ம கட்சிக்காரங்க வீட்டு விழா தான்' என்று சொல்ல, உடனடியாக ஒரு வாழ்த்து சொல்லிட்டு வருவோம் என்றார்.

அன்புமணி ராமதாஸ்
இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் தனது வாகனத்தை மண்டபத்தை நோக்கி திருப்ப சொன்னதும், அங்கிருந்த அனைவரும் இன்ப அதிர்ச்சியில் மகிழ்ச்சியில் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். விறுவிறுவென்று வேகமாக விழா மேடைக்கு சென்றவர், விழா நாயகியை வாழ்த்தி ஆசிர்வதித்து, குடும்பத்தினருடன் புகைப்படத்தினை எடுத்த பிறகு அன்புமணி விடைபெற்று சென்றார்.

இன்ப அதிர்ச்சி
'எதிர்பாராத நேரத்தில் திடீரென வந்த அன்புமணி ராமதாஸை பார்த்ததும், இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தனர். அங்கு கூடியிருந்த உறவினர்கள் அனைவரும், 'ஆஹா பாருயா திடீர் யோகத்தை, அழைக்காமலே தலைவர் திடீரென வந்துட்டார்' என நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications