என்எல்சியின் ராட்சத குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு.. போராட தயாராகும் மக்கள்?.. போலீஸ் குவிப்பு
கடலூர்: என்எல்சியின் ராட்சத குழாய் பதிக்கும் பணியை எதிர்த்து போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும் பாமக போராட்டங்களை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக போராடுகின்றனர். கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அழித்து கான்கிரீட் போடும் பணிகள் நேற்று தொடங்கியது.
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 30-க்கு மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் போடும் பணி நடைபெறுவதாக தகவலறிந்த பாமக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதில் டயர்கள் கொளுத்தப்பட்டன. இதையடுத்து போலீஸார் பாமகவினரை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று அழிக்கப்பட்ட நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு வட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கான்கிரீட் போடும் பணிகள் தொடங்கப்பட்டன. ராட்சத குழாய் பதிக்கும் பணிகளும் தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இநத் தகவலறிந்த கிராம மக்கள் போராட்டம் நடத்த போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வளையமாதேவியில் 300 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பதற்றமான தெருக்களில் ஒவ்வொரு தெருவுக்கு 3 முதல் 10 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications