காவலருக்கே வெட்டு.. சிதம்பரம் அருகே கஞ்சா வியாபாரியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சி செய்த கஞ்சா வியாபாரி நவீன் என்பவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர். நவீன் கத்தியால் வெட்டியதில், காவலர் ஐயப்பன் என்பவர் பலத்த காயமடைந்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அருகே உள்ள ஆழ்பேட்டை சோதனைச் சாவடியில் போலீஸார் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கஞ்சா கொண்டு வந்த ஸ்ரீராம், சந்துரு ஆகிய இருவரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Chidambaram Ganja shoot

விசாரணையில், இவர்கள் இருவரும் சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின்பேரில், அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ய போலீஸார் அழைத்துச் சென்றபோது, நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐயப்பன் என்கிற காவலரை வெட்டியுள்ளார்.

காவல் ஆய்வாளர் அம்பேத்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நவீன் தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டியதால் போலீஸார் நவீனின் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு பாய்ந்ததால் காயமடைந்த நவீன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்தில் கஞ்சா புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+