கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

9ம் வகுப்பு மாணவி கடத்தல்.. மிரட்டி பலாத்காரம்.. கணக்கு வாத்தியாருக்கு ஆயுள் தண்டனை!

பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கடலூர்: 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி கல்யாணம் பண்ணின கணக்கு வாத்தியாருக்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை தந்து உத்தரவு போட்டுள்ளது.

2016ம் ஆண்டு பண்ருட்டியில் நடைபெற்ற சம்பவம் இது. அப்போது அந்த மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் கணக்கு வாத்தியார்தான் ராஜீவ்காந்தி.

13 வயதே ஆன அந்த சிறுமியை 33 வயதான அதுவும் கல்யாணமான ராஜீவ்காந்தி அடிக்கடி சந்தித்து பேசி வந்ததுடன், நிறைய உரிமை எடுத்து கேலி கிண்டலும் செய்து வந்தார். ஒருநாள் காலை நோட்டு புத்தகம் வாங்க மாணவியை கடைக்கு போனார்.

பெண் பேஷன் டிசைனர், பணியாள் கொலைகளில் திடீர் திருப்பம்... டெய்லர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பெண் பேஷன் டிசைனர், பணியாள் கொலைகளில் திடீர் திருப்பம்... டெய்லர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

 மிரட்டி கடத்தினார்

மிரட்டி கடத்தினார்

அப்போது பைக்கில் வந்த கணக்கு வாத்தியார், மாணவியை பார்த்து தன்னுடன் பைக்கில் ஏறுமாறு கூறினார். அதற்கு சிறுமி மாட்டேன் என்று சொல்லவும், பைக்கில் வரவில்லை என்றால் தம்பி, தங்கைகளை கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டி பைக்கில் ஏற்றி கடத்தி சென்றார்.

 பலமுறை பலாத்காரம்

பலமுறை பலாத்காரம்

இப்படியே பைக்கில் வாத்தியார் திருப்பதி வரை மாணவியை கொண்டு போய் விட்டார். அங்கு கோயிலில் வைத்து தாலியும் கட்டி விட்டு, அங்கேயே ஒரு ரூம் எடுத்து பலமுறை மாணவியை பலாத்காரமும் செய்துள்ளார். திரும்பவும் அங்கிருந்து பைக்கிலேயே ஒகேனக்கல் கூட்டி போய் அங்கியும் ரூம் எடுத்து மாணவியை சீரழித்து உள்ளார்.

 பஸ் ஏற்றிவிட்ட ஆசிரியர்

பஸ் ஏற்றிவிட்ட ஆசிரியர்

இதனிடையே பெண்ணை காணோம் என்று பெற்றவர்கள் போலீசில் புகார் சொல்ல, மற்றொரு பக்கம் வாத்தியாரையும் ஸ்கூலில் இல்லாமல் சந்தேகம் அதிகமாகிவிட்டது. பிறகுதான் வாத்தியாரை போலீஸ் தேட போய், உஷாராகிவிட்ட அவர், மாணவியை மட்டும் பஸ் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

 மகளிர் போலீசார்

மகளிர் போலீசார்

பெற்றவர்களை பார்த்ததும் கதறி அழுதவாறே விஷயத்தை மாணவி சொல்ல, பல்வேறு பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்கை பதிவு செய்து ராஜீவ்காந்தியை கைது செய்தனர். அப்போதிருந்து இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. தற்போது, இது சம்பந்தமாக மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு சொன்னார்.

 ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

அதில், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜீவ்காந்திக்கு ஆயுள் தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். ஒருவேளை அபராத தொகையை வாத்தியார் கட்டத் தவறினால், மேலும் 2 வருஷங்கள் சிறை தண்டனை என்றும் உத்தரவிட்டார். பைக்கிலேயே மாணவியை கடத்தி கடத்தி சீரழித்த கணக்கு வாத்தியாருக்கு ஒரு வழியாக தண்டனை கிடைத்துள்ளதை பலர் வரவேற்றுள்ளனர்.

English summary
School Teacher gets Sentenced to life for Sexually abusing: Cuddalore Court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X