ரயில் விபத்து: சுரங்கப்பாதைக்கு ஒரு வருடமாக அனுமதி தரல.. கடலூர் ஆட்சியர் மீது தெற்கு ரயில்வே பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரில் ரயில்வே கேட்டில் சென்றபோது பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் வரும் நேரத்தில் கேட்டை அடைக்காமல் கேட் கீப்பர் தூங்கியதாலேயே விபத்து நேரிட்டதாக கூறப்படும் நிலையில், ரயில்வே இதனை மறுத்துள்ளது. இதற்கிடையே இந்த விபத்துக்கு மாவட்ட ஆட்சியரும் ஒரு காரணம் என ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மகுப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியானார்கள். இன்று காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது.

southern-railway-accuses-cuddalore-collector-of-not-giving-permission-for-railway-tunnel-for-a-year

ரயில்வே கேட்டை மூடாமல் கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ரயில்வே தண்டவாளத்தை பள்ளி வேன் கடக்க முயன்ற போது, விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேனில் மோதியது. இதில் பள்ளி வேன் தூக்கி வீசப்பட்டு சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா பணியில் அலட்சியமாக இருந்ததே விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்தும் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

விபத்து ஏற்படும் நேரத்தில் ரயில்வே கேட் கீப்பர், கேட்டை மூடாமல் தூங்கிவிட்டதாகவும் இதனால், ரயில்வே கேட் திறந்து இருந்ததால் பள்ளி வேன் தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்ட போது விபத்து நேரிட்டது எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாரும் விசாரணை தொடங்கியுள்ளனர்.

பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை அடைத்ததாகவும், சில வாகன ஓட்டிகள் தான் ரயில் வருவதற்கு இன்னும் நேரம் இருக்கு கேட்டை திறங்கள் என்றும், சிலர் கேட்டு போட்டு இருந்த போதே அதுவழியாக சென்றதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் இல்லாததால் உண்மை எதுவென தெரியவில்லை. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரும் ஒரு காரணம் என ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது. அதாவது செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க ஒரு வருடமாக ஆட்சியர் அனுமதி கொடுக்கவில்லை என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் அனுமதி தரவில்லை என்றும் தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் விளக்கமளித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி துறையிடம் தரவுகள் கேட்டுள்ளேன். முழு விவரங்கள் கிடைத்தவுடன் உரிய பதில் தரப்படும். ரயில்வே அளித்த அறிக்கையை முழுமையாக பார்த்துவிட்டு விளக்கமளிக்கப்படும் எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+