NLCக்கு எதிராக வேல்முருகன் போடும் பெரிய ப்ளான்! பா.ம.க.வை தொடர்ந்து த.வா.க.! கண்காணிக்கும் காவல்துறை
கடலூர்: பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து என்.எல்.சி.க்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் திட்டத்தில் இருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
மலேசியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாட்களுக்கு முன்னர் தமிழகம் திரும்பிய வேல்முருகன், நேராக கடலூர் சென்றதோடு கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

அதில் என்.எல்.சி.க்கு நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்கிற வகையில் ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், விளைந்த பயிர்களை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அழித்ததை கண்டித்து நெய்வேலியில் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் என்.எல்.சி. விவகாரத்தில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் வேல்முருகன்.
இதனிடையே பாமக போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் அதனை அசம்பாவிதமின்றி கட்டுப்படுத்தவே காவல்துறைக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் களமிறங்கவுள்ளதால் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
வேல்முருகன் சற்று தடாலடியானவர் என்பதால் என்.எல்.சி.க்கு எதிரான த.வா.கா. போராட்டக் களம் இன்னும் வீரியமாக இருக்கும் எனக் கருதுகிறது காவல்துறை. அன்புமணியை விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் அமைதிப்படுத்தியதை போல் வேல்முருகனை அமைதிப்படுத்துவதற்கான முயற்சிகளும் காவல்துறை தரப்பில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தலாம் என்பதால் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு வழங்கவுள்ளது காவல்துறை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications