விஜயகாந்த், பிரேமலதாவை பார்த்திருப்பீங்க..இனி இருவரையும் கலந்து என்கிட்ட பார்ப்பீர்கள்.. மகன் அதிரடி
பண்ருட்டி: விஜயகாந்த் பார்த்திருப்பீங்க, பிரேமலதாவை பார்த்திருப்பீங்க, இனி இருவரையும் கலந்து இந்த விஜயபிரபாகரனை பார்ப்பீர்கள் என மகன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

அதிமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகளை கொடுக்காததால் என்ன செய்வது என்பது குறித்து தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவது என்ற முடிவை விஜயகாந்த் அறிவித்தார்.
இதையடுத்து பண்ருட்டி பொதுக் கூட்டத்தில் விஜயபிரபாகரன் தொண்டர்கள் முன் பேசுகையில் பேரம் பேசுறாங்கன்னு சொல்கிறார்கள். என்றுமே கேப்டன் கேட்கும் இடத்தில் இல்லை. கொடுக்கும் இடத்தில் இருக்கிறார்.

சோம்பேறியாக்குறாங்க!
அவருக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள். இவர் ரூ1000 தரேன்றாரு, அவர் 1500 ரூபாய் தரேன்றாரு. மாசம் 1000 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் தமிழக மக்களாகிய நாம் இருக்கிறோமா. இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்குகிறார்கள்.

அதிமுகவிற்கு இனி இறங்குமுகம்
எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும், வரும் தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக தக்க பதிலடிக் கொடுக்கும். அதிமுகவின் ஆணவத்தை மக்கள் அடக்க போகிறார்கள். நாங்கள் கேட்கிறத சீட் கிடைக்கவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். அதிமுகவிற்கு இனி இறங்குமுகம்தான்.

உதாசீனப்படுத்திட்டாங்க!
அதிமுகவுடன் கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக இருந்தோம். ஆனால் அதிமுகவினர் நம்மை உதாசீனப்படுத்திவிட்டார்கள். எனவே தான் கூட்டணியிலிருந்து விலகியுள்ளோம். இதுவரை விஜயகாந்த்தை பார்த்திருப்பீங்க. பிரேமலதாவ பார்த்திருப்பீங்க. இனி அவங்க ரெண்டு பேரையும் கலந்து விஜயபிரபாகரனா பார்ப்பீர்கள்.

ஜெயலலிதா
எடப்பாடி பழனிச்சாமி, தன்னை ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்று நினைக்கிறார். இதனை அதிமுகவினர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். சாணக்கியனாக இருந்தது போதும். இனி சத்ரியனாக இருக்க வேண்டும் என செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications