Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நொடியில் 9 பேருக்கு எமனாகிய அரசு பேருந்து.. கடலூர் விபத்து எப்படி நடந்தது? உருக்கமான தகவல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அரசு பஸ்சின் டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடி கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். அரசு பேருந்தால் விபத்தில் சிக்கிய ஒரு காரில் ஒரே குடும்பத்தினர் பயணித்துள்ளனர். அதேபோல் இன்னொரு காரில் ஒரு தொழில் அதிபர் குடும்பம் வந்துள்ளது. இந்த இரண்டு கார்களுக்கும் எமனாக அரசு பேருந்து ஒரு நொடியில் மாறியது எப்படி? இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை பார்ப்போம். அதேபோல்

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை என்பது விபத்துக்கள் அதிகம் நடக்கும் சாலையாக மாறி வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு இருந்த வாகன போக்குவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நான்குவழிச்சாலை, இப்போது செல்லும் லட்சக்கணக்கான வாகனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சுத்தமாக இல்லை.. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வண்டிகள் செல்வதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிறு கவனக்குறைவும் பெரிய விபத்தில் முடிகிறது.

Government bus car National Highway

பலர் இரு லேன் மட்டுமே இருப்பதால், அதிவேகமாக முந்தில் செல்ல முயல்கிறார்கள். அப்போது மெதுவாக செல்லும் வாகனங்களின் பின்னால் மோதி விபத்தில் சிக்கிவிடுகிறது. எனவே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையைகுறைந்தது 8 வழிச்சாலையாக மாறினால் தான் விபத்தை குறைக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்னும் அந்த பணிகள் விரைவுப்படுத்தப்படவில்லை... அதனால் விபத்துக்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதேபோல் அரசு பேருந்துகளும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதுவும் விபத்திற்கு காரணமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநத்தம் அருகே நடந்த விபத்து குறித்து பார்ப்போம்.

மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.15 மணிக்கு சென்றது. அப்போது பஸ்சின் முன்பக்கம் வலது புறம் இருந்த டயர் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு தாறுமாறாக ஓடத்தொடங்கி உள்ளது.

இதில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது ஏறிய பஸ் மறுமார்க்கத்தில் சென்னை-திருச்சி சாலையில் பாய்ந்தது. அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற 2 கார்கள் மீது மோதி சாலையோர பள்ளத்திற்குள் பஸ் பாய்ந்து நின்றது. இதனால், பஸ்சில் பயணித்த பயணிகள் கூச்சலிட்டனர். அவர்கள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.

பஸ் மோதிய வேகத்தில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் சிக்கி இருந்தவர்கள் காப்பாற்றுமாறு குரல் எழுப்பினார்கள். இதை பார்த்தவர்கள் ஓடோடி வந்து மீட்க முயன்றனர் ஆனால் கார்களுக்குள் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் , மீட்பு பணியை மேற்கொண்டனர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேர், சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஒரு குழந்தையும், முதியவரும் உயிரிழந்தனர். இதன் மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மற்ற 4 பேர் கவலைகிடமான நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போலீசாரால் இறந்தவர்கள் குறித்த விவரத்தை கண்டுபிடித்தனர். இதன்படி விபத்தில் சிக்கிய ஒரு காரில் வந்தவர்கள் கரூர் சின்ன ஆண்டான் கோயில் சுப்பையா பிள்ளை லே-அவுட் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜரத்தினம்(வயது 67), அவரது மனைவி ராஜேஸ்வரி(57), கார் டிரைவரான ஜெயக்குமார்(30) என்பதும் தெரியவந்தது.

இதேபோல் அரசு பேருந்து மோதிய மற்றொரு காரில் திருச்சி திருவரம்பூர் காட்டூரை சேர்ந்த ஒரே குடும்பமான முகமது பாரூக்(45), அவரது மனைவி ரிபானா(33), அவரது மகள் தாஜ்பிர்கா(10), மகன் அப்துல் பாத்தா(7), புதுக்கோட்டை பிள்ளை தண்ணீர் பந்தல் கலீப் நகர் சிராஜூதின் மனைவி குர்ஜீஸ் பாத்திமா(32), இவரது மகன் அஜீஸ் அகமது(3) என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்தில் காயம் அடைந்து பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு பேர் விவரமும் தெரியவந்துள்ளது. இதன்படி பிள்ளை தண்ணீர் பந்தலை சேர்ந்த முகமது காசிம், அவரது மனைவி அமிஷா(52), சிராஜூதின் மகன்கள் அக்துல்அஜிஸ்(8), அப்துல் அஹர்(6) ஆகிய 4 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்தில் காயமடைந்த முகமது காசிம் மகன் சிராஜூதின் என்பவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா சென்றுள்ளார். அவரை வழி அனுப்பு வதற்காக முகமது பாரூக் மற்றும் முகமது காசிம் குடும்பத்தினர் காரில் சென்னைக்கு சென்றுள்ளனர். விமான நிலையத்தில் சிராஜூதினை வழியனுப்பி வைத்த அவர்கள் மீண்டும் அங்கிருந்து காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார்கள். அப்போது கார் டயர் வெடித்து விபத்து நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+