டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உயிரிழப்பு.. சுஷ்மா சுவராஜ் உறுதி

Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தில் வழிபாடு நடத்தியவர்களை குறி வைத்து தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த கொடூர சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவத்த்தில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் உறுதி செய்துள்ளது.

இலங்கை குண்டு வெடிப்புகள் பின்னணியில் இருப்பது எந்த அமைப்பு? வெளியானது வீடியோ ஆதாரம் இலங்கை குண்டு வெடிப்புகள் பின்னணியில் இருப்பது எந்த அமைப்பு? வெளியானது வீடியோ ஆதாரம்

பினராயி தகவல்

பினராயி தகவல்

நேற்று முன்தினம் லோகஷினி, லட்சுமி, நாராயணன், சந்திரசேகர் ஆகிய 3பேர் உயிரிழந்திருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. இதேபோல் கேரளாவைச் சேர்ந்த ரஸீனா உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.

இந்தியர்கள் உயிரிழப்பு

இந்தியர்கள் உயிரிழப்பு

நேற்று ரங்கப்பா, வெமுராய், துளசிராம், நாகராஜ உள்பட 4 பேர் உயிரிழந்ததை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்தார்.

பலி எண்ணிக்கை 10

பலி எண்ணிக்கை 10

இன்று மேலும் இரண்டு இந்தியர்கள் (மொரே கௌடா, புட்டா ராஜு) உயிரிழந்து இருப்பதை சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்ககத்தில் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் 10 இந்தியர்கள் இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்திருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

இலங்கையில் துக்க தினம்

இலங்கையில் துக்க தினம்

300க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதற்காக இலங்கையில் இன்று ஒரு நாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்டுகிறது. இந்நிலையில் இலங்கை முழுவதும் சமூக வலைதளங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
Minister Sushma Swaraj says, Regret to confirm the deaths of two more Indian nationals A Maregowda and H Puttaraju in the blasts in Sri Lanka on Sunday, taking the total number of Indian deaths in the tragedy to 10 as of now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X