லோக்சபாவில் 'தெறி' வாதம்! மோடி, அமித்ஷா,ராஜ்நாத்தை ஆவேசமாக்கிய ராகுல் காந்தி பேச்சு- 10 பாயிண்ட்ஸ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரை ஆவேசப்பட வைத்துவிட்டது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சரமாரியான விமர்சனம். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக- பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு உடனுக்குடன் எழுந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் பதிலளித்தனர்.
லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சின் முக்கிய அம்சங்கள்:

- எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமே அல்ல.
- சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல. மாறாக அகிம்சையின் சின்னம்.
- பிரதமர் மோடிதான் கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறர்; கடவுளுடன் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்.
- மகாத்மா காந்தியை ஆவணப் படம் மூலமே உலகம் அறிந்ததாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மோடி வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் மகாத்மா காந்தியடிகளை அறிந்திருக்கலாம்.
- ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்?
- அயோத்தியில் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு உள்ளூர் மக்களை அழைக்கவில்லை. ஆனால் அம்பானியை அழைத்தனர்.
- ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜகவோ, பிரதமர் மோடியோ பிரதிநிதி அல்ல. பாஜக 24 மணிநேரமும் வெறுப்பையே பரப்புகிறது. இந்து மதம் வெறுப்பை போதிக்கவில்லை.
- உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள்தான் பாஜகவினர். வன்முறை செய்கிற இந்துக்கள்தான் பாஜகவினர். இந்துக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். ஆனால் பாஜகவினரோ அதற்கு நேர் எதிராக உள்ளனர்.
- இந்தியா என்ற கருத்தியலே கடும் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலை மக்கள்தான் பாதுகாத்துள்ளனர்.
- பிரதமர் மோடியின் உத்தரவால் என் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இன்றும் பல தலைவர்கள் சிறையில் உள்ளனர். அமலாகத்துறையால் 55 மணிநேரம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டேன். அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன். என் எம்பி பதவியை பறித்தனர்; என் எம்பி இல்லத்தை பறித்தனர்.
More From
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications