சீனாவிடம் 500 அணு ஆயுதங்கள், 5,000 கி.மீ பாயும் ஏவுகணைகள்.. யு.எஸ். 'ஷாக்' அறிக்கை- 10 பாயிண்ட்ஸ்!
டெல்லி: சீனா தம் வசம் ஆக்டிவ் மோடில் 500 அணு ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் 5,000 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை தயாரித்துள்ளதாகவும் அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகன் ஆண்டுதோறும் வெளியிடும் அறிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஆண்டு அறிக்கையை பென்டகன் வெளியிட்டுள்ளது.

பென்டகன் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
1.500 அணு ஆயுதங்களை ஆக்டிவ் மோடில் சீனா வைத்துள்ளது.
2.2030 ஆம் ஆண்டுக்குள் சீனா வசம் இருக்கப் போகும் அணு குண்டுகள் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்கும்.
3.2022-ல் புதியதாக 3 ஏவுகணை தளங்களை சீனா கட்டி முடித்துள்ளது.
4.இந்த ஏவுகணை தளங்களில் 300 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
5.சீனாவின் ஏவுகணை இலக்கு 5,500 கி.மீ. தொலைவு. இது அமெரிக்காவுக்கும் பேராபத்தாகவே அமையும்.
6.மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, நைஜீரியா, நமீபியா, மொசாம்பிக், பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் ராணுவ தளங்களை அமைக்க சீனா மும்முரம் காட்டுகிறது.
7.சீனா கடற்படையில் 370 க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
8.சீனா வசம் இதுவரை இருந்த போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் எண்ணிக்கை 340.
9.2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 395 ஆகவும் 2030-க்குள் 435 ஆகவும் அதிகரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.
10.தைவானை ஆக்கிரமித்து கைப்பற்றும் நோக்கத்தில் சீனாவின் முப்படைகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளன.
இவ்வாறு பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய எல்லைகளில் லடாக் பான்காங், பூட்டானின் டோக்லாம் உள்ளிட்ட பகுதிகளில் சீனா பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை தீவிரமாக்கி இருக்கிறது; புதிய ராணுவ குடியிருப்புகள், புதிய போர் விமான தளங்கள், புதிய ராணுவ ஹெலிபேடுகள் என அதிநவீன வசதிகளுடன் ராணுவ விரிவாக்க நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications