டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 ஆண்டு சட்டப்போராட்டம்.. 10 நொடியில் தரைமட்டாகும் 40 அடுக்கு குடியிருப்பு.. இவ்வளவு கோடி இழப்பா?

Google Oneindia Tamil News

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 தளங்களை கொண்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பை அகற்ற சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றத்தை நாடிய குடியிருப்பவா்களுக்கு ஆதரவாக தற்போது தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

10 years of legal struggle; 40 floor flat in 10 seconds

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 10 ஆண்டுக்கால போராட்டத்தின் வெற்றி வெறும் 10 நொடிகளில் சாத்தியப்பட உள்ளது. ஏனெனில் இக்கட்டிடங்களை இடிக்க வெறும் 10 விநாடிகள் போதுமானதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் பெருநகரங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு இருப்பிட வசதிகளை உருவாக்கிடவும், இதனை உருவாக்கும் நிறுவனங்களுக்கு இடையேயுள்ள போட்டியும் இம்மாதிரியான விதி மீறல்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியில் உள்ள ஒரு இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் 40 தளங்களை கொண்டுள்ளது. ஆனால் இது பசுமையான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதை கட்டியதில் விதி மீறல்கள் அதிக அளவில் நடந்துள்ளது என்றும் நீதிமன்றத்தில் குடியிருப்பு வாசிகளால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2012ல்) வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிலபல பாதுகாப்பு காரணங்களுக்கா ஓராண்டாக இந்த இடிப்பு தள்ளிப்போயுள்ளது.

வெளிநாடுகளில் இதுபோன்று பெரிய கட்டிட இடிப்புகள் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடந்தேறியுள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற கட்டிட இடிப்புகள் பெரிய அளவில் நடந்திருக்கவில்லை. எனவே பாதுகாப்பு அம்சங்களை கவனமாக கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் இந்த தாமதங்கள் தவிர்க்க இயலாததாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள், ஆகஸ்ட் 28ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இடிப்புக்கு சுமார் 3,700 கிலோ வெடிமருந்துகள் தேவைப்படும். இதன் மூலம், ரிக்டர் அளவில் 4 வரை அதிர்வுகள் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் அதிர்வுகள் 30 மீட்டர்கள் வரை உணர முடியும். ஆனால் நல்வாய்ப்பாக, நொய்டா நகரம் ரிக்டர் அளவு 6 வரை நில அதிர்வுகளை தாங்கும் என்பதால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இடிப்பு காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 7,000 பேர் காலை 7 மணிக்கு இந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் மாலை 5.30 மணிக்கு மீண்டும் அவரவர் குடியிருப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல 28ம் தேதி காலை முதல் மாலை 4 மணி வரை எரிவாயு மற்றும் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்படும். ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்த கட்டிடம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும். இதற்கு முழுமையாக 9 விநாடிகள் வரை எடுக்கப்படும். இதில் இவ்வளவு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் உடையும் வாய்ப்பு உள்ளதால் சிலர் கவலையடைந்துள்ளனர்.

English summary
(நொய்டாவில் இடிக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள்): Residents had moved court in 2012 as Supertech sought to add super-tall towers to existing society; the final court verdict came last year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X