வந்தே பாரத் 100% சக்ஸஸ்.. 3 வந்தே பாரத் குறித்து தென்னக ரயில்வே ஹேப்பி தகவல்.. முட்டிமோதும் பயணிகள்
டெல்லி: வந்தே பாரத் ரயில் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
எனினும், சில வழித்தடங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சமீபத்திய ஆய்வில் வந்தே பாரத் ரயில்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.. வந்தே பாரத் ரயில்களில் பெரும்பாலான சீட்கள் நிரம்பிவிடுகின்றன.. ஆனால், சில ரயில்களில் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
கட்டணம் அதிகம்: எனவே, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களில் கட்டணத்தை குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக தெரிகிறது. ஒருவேளை, கட்டணத்தை குறைத்தால், கூடுதல் பயணியர் வந்தே பாரத் ரயில்களை விரும்புவர் என்றும் நம்பப்படுகிறது. அந்தவகையில், பாரத் சாதாரண் ரயில் சேவை விரைவில் கொண்டுவரப்படும் என்றார்கள்.
அதன்படி, இப்போதுள்ள வந்தே பாரத் ரயிலில் சில மாற்றங்களை செய்து, சாதாரண வந்தே பாரத் அல்லது "அந்த்யோதயா வந்தே பாரத்" என்ற பெயரில் இயக்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சரும் உறுதி தந்துள்ளார்.
ரயில் டிக்கெட்கள்: இந்நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் குறித்து, தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் இயக்கப்படும் 2 வந்தே பாரத் ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு 100 சதவீதத்தை விட அதிகமாக இருக்கிறதாம்.
இந்தியாவில் மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சென்னை சென்ட்ரல் - மைசூர்,சென்னை சென்ட்ரல் - கோவை,காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றன.. தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும், இந்த ரயில்களில் சராசரி டிக்கெட் முன்பதிவு 100 சதவீதத்துக்கு மேல் இருப்பதாகவும் அதிகாரிகள் புளகாங்கிதம் தெரிவித்துள்ளனர்.
100 சதவீதம்: தென்னக ரயில்வே இதுகுறித்து சொல்லும்போது, "சென்னையில் இருந்து மைசூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகள் + 14 ஏசி சேர் கார் பெட்டிகள் இருக்கின்றன.. கிட்டத்தட்ட 1,128 பேர் பயணிக்கக்கூடிய இந்த ரயிலில், முன்பதிவு எக்ஸ்கியூட்டிவ் சேர் கார் பெட்டியில் 141 சதவீதமாகவும், ஏசி சேர் கார் பெட்டியில் 127 சதவீதமாகவும் இருக்கிறது.
இதேபோல், கோவைக்கு இயக்கப்படும் ரயிலில் ஒரு எக்ஸ்கியூட்டிவ் பெட்டி மற்றும் 7 ஏசி பெட்டிகள் உள்ளன. 596 பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த ரயிலில் எக்ஸ்கியூட்டிவ் பெட்டியில் டிக்கெட் முன்பதிவு சராசரியாக 109 சதவீதமாகவும், ஏசி சேர் கார் பெட்டியில் 110 சதவீதமாகவும் இருக்கிறது.
ஆலோசனை: அதுபோல், கேரளாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. கூடுதல் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, இந்த 3 வந்தேபாரத் ரயில்களுக்கும் பயணிகளிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. இதையடுத்து, கூடுதல் வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரயில்வே வாரியம் ஒப்புதல் கிடைத்தவுடன், கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்" என்றார்.
கன்னியாகுமரி: சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த ஏப்ரல் 9ம் தேதி இந்த சேவை துவங்கியது.. சென்னை சென்ட்ரல் -- மைசூரு சேவை கடந்த ஆண்டு நவம்பர் 12-ல் சேவை துவங்கியது. இதைத்தவிர. சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரிக்கும் இந்த சேவையை நீட்டிக்கும்படி கோரிக்கைகள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications