இமாச்சலப் பிரதேசத்தில் சோகம்.. 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
டெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில், சிம்லாவிலிருந்து ராஜ்கர் வழியாக குப்வி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, நாஹனிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள ஹரிபுர்தார் கிராமம் அருகே 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்திரந்தனர். பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
39 இருக்கைகள் கொண்ட அத்தனியார்ப் பேருந்து, அதிகப் பயணிகளுடன் இயங்கியது. விபத்து நடந்தவுடன், அவசரக் குழுக்கள் வரும் முன்பே உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

விபத்து குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில், மீட்புப் பணிகள் 'யுத்த கால அடிப்படையில்' நடைபெறுவதாகவும், காயமடைந்தவர்கள் சங்கரா மற்றும் தாதாஹு மருத்துவமனைகளுக்கு விரைவுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, விபத்துக்கு இரங்கல் தெரிவித்தார். அவர் விடுத்த அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்து குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மத்திய சுகாதார அமைச்சர் ஜே. பி. நட்டா, இமாச்சலச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய் ராம் தாக்கூர், மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் பிண்டல், ஷிம்லா பா.ஜ.க எம்.பி. சுரேஷ் காஷ்யப் மற்றும் துணை முதலமைச்சர் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
ஷல்லாய் எம்.எல்.ஏ.வும், தொழில் துறை அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் சவுகான், விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டு, தாதாஹு, சங்கரா, நாஹன் மருத்துவமனைகளில் மருத்துவக் குழுக்கள் அவசர சிகிச்சைக்குத் தயாராக படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சாலையில் படிந்த பனிப்பொழிவு காரணமாக பேருந்து சறுக்கி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து இடிபாடுகளிலிருந்து மீட்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன.
உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications