சட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதால் நாடு கடத்தப்பட்ட 145 இந்தியர்கள் இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்குள் மெக்சிகோ வழியாகத்தான் பெருமபாலானோர் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.

இதனால் மெக்சிகோ அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் அத்தனை பொருட்களுக்கும் கடும் வரிவிதிக்க நேரிடும் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து அக்டோபர் மாதம் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். பின்னர் அமெரிக்காவில் இருந்து அக்டோபர் 23-ந் தேதி 117 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது 145 இந்தியர்கள், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். 145 இந்தியர்களுடன் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாட்டவரும் ஒரே விமானத்தில் அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்டு டெல்லி திரும்பியவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். சர்வதேச ஏஜெண்டுகளிடம் ரூ10 முதல் ரூ15 லட்சம் வரை கொடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக நாடு கடத்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications