இக்கட்டான சூழ்நிலையிலும்.. இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னேறுகிறது.. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை
டெல்லி: இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், அதன் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவ்வாறு தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றியபோது திமுக, காங்கிரஸ் உட்பட 19 எதிர்க்கட்சிகள், அதை புறக்கணித்துவிட்டன. விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உரையை புறக்கணித்தனர்.
இதனிடையே, ராம்நாத் கோவிந்த் தனது உரையில் பேசியதாவது:
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு புதிய ஆண்டு & ஒரு புதிய தசாப்தம்.
நாம் சுதந்திரமடைந்த 75வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம். நாடாளுமன்ற அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கையுடனும் இங்கு வந்துள்ளனர். எவ்வளவு கடினமான சவாலாக இருந்தாலும் நம்மை அது தடுத்து நிறுத்த முடியாது.
கொரானா வைரஸ் தாக்கத்தால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சுய சார்புடன் இருப்பதுதான் தற்போதைய இந்தியாவின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் இந்த பெரிய தொற்று நோய் காலத்தில் பெரிய பலனை அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது.
இந்த தொற்று நோய் காலகட்டத்தில் நாம் பல அன்புக்குரிய குடிமக்களை இழந்துள்ளோம். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த தொற்று நோய்க் காரணமாக இறந்தார். 6 எம்பிக்கள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில் கொரோனா வைரசில் இருந்து மீண்டு கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications