நீட் வினாத்தாள் “லீக்” ஆனது உறுதி.. 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை!
டெல்லி: நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 17 மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மே 5ஆம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம் செய்துள்ளது தேசிய தேர்வு முகமை.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு முடிவுகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த பிரச்சனை பூதாகரமானது. இதனைத் தொடர்ந்து 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. மறுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மறுதேர்வு நடந்தது.

இதற்கிடையே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஏற்கனவே பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜார்கண்டில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பாட்னா அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீட் தேர்வு வினாத்தாள்களை கசிய விட்டு விற்பனை செய்ததில் சஞ்சய் முக்யா என்பவர் முக்கிய நபராகச் செயல்பட்டது தெரியவந்தது.
மேலும் உத்தர பிரதேசம் வழியாக பீகாருக்கு நீட் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. உ.பி காவலர் தேர்வில் வினாத்தாளை கசியவிட்ட ரவி அட்ரி கும்பலுக்கு நீட் வினாத்தாள் கசிவிலும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து உபி சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் ரவி அட்ரி கைது செய்யப்பட்டார்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் சஞ்சீவ் துக்காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான் பதான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இன்று 750 மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுதவில்லை.. 48% ஆப்செண்ட்.. ஷாக் தகவலை வெளியிட்ட என்.டி.ஏ!
நீட், நெட் உள்ளிட்ட தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உறுதியானதை அடுத்து, பீகாரில் தேர்வு எழுதிய 17 மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மே 5ஆம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம் செய்துள்ளது தேசிய தேர்வு முகமை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications