18-வது லோக்சபா கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது- தமிழக எம்பிக்கள் 39 பேரும் ஜூன் 25-ல் பதவியேற்பு!
டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. லோக்சபாவில் நாளையும் நாளை மறுநாளும் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொள்வர். லோக்சபாவில் தற்காலிக சபாநாயகர் பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மகதாப், புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஜூன் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
18-வது லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் முதல் 2 நாட்களும் புதிய எம்பிக்கள் பதவியேற்பர். 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரிலேயே சர்ச்சை வெடித்திருக்கிறது. புதிய எம்பிக்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் தற்காலிக சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டுள்ளதுதான் அந்த சர்ச்சை. 8 முறை எம்பியான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ், தலித் என்பதால் அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவியை மத்திய பாஜக அரசு வழங்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
மேலும் புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு தற்காலிக சபாநாயகருக்கு உதவ கொடிக்குன்னில் சுரேஷ்(காங்கிரஸ்), டிஆர். பாலு(திமுக), ராதா மோகன் சிங்(பாஜக),பகன்சிங் குலஸ்தே(பாஜக) சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்காலிக சபாநாயகர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த குழுவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இடம் பெறாமல் புறக்கணிக்க இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து ஜூன் 26-ந் தேதி லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜூன் 27-ந் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார். அப்போது நீட், நெட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் முன்வைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஜூன் 28-ல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இதன் பின்னர் ஜூலை 2-ந்தேதி லோக்சபாவில் 3-வது முறை பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி முதல் முறையாக உரையாற்றுவார்.
இதனிடையே லோக்சபாவில் நாளை மொத்தம் 280 எம்பிக்கள் பதவியேற்கின்றனர். மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 280 புதிய எம்.பிக்களுக்கு நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்களும் நாளை மறுநாள் ஜூன் 25-ந் தேதி பதவியேற்க உள்ளனர். தமிழ்நாட்டு எம்பிக்களுக்கு ஜூன் 25-ந் தேதி பிற்பகல் 1 முதல் 3 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications