நிர்வாண மசாஜ் பண்ண சொல்வார்.. மாதவிடாய்னாலும் விடமாட்டார்.. அதிர வைக்கும் சின்மயானந்தா மறுபக்கம்
சின்மயானந்தா மீது மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்
Recommended Video
டெல்லி: "நிர்வாண மசாஜ் பண்ணனும்'... 'மாதவிடாய்'ன்னு சொன்னாலும் விடமாட்டாரு" என்று பாஜக மூத்த தலைவர் சின்மயானந்தா மீது சட்ட கல்லூரி மாணவி தந்திருக்கும் வாக்குமூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவரும் மத்திய முன்னாள் இணை அமைச்சருமான சின்மயானந்தா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஒரு வருடமாக உடல்ரீதியாக துன்றுபுறுத்தினார் என்று சட்டக்கல்லூரி மாணவி பகிரங்கமாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமான புகாரை அவர் அளித்ததை தொடர்ந்து, கடந்த 20ம் தேதி சின்மயானந்தா கைது செய்யப்பட்டு இப்போது ஜெயிலில் உள்ளார். இந்நிலையில் சின்மயானந்தா தனக்கு எப்படியெல்லாம் பாலியல் தொல்லை தந்தார் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வாக்குமூலம் அது தி பிரிண்ட் இணைய இதழில் வெளியாகியுள்ளது.

மரியாதை
அதில் மாணவி சொல்லியுள்ள வாக்குமூலத்தின் சுருக்கம் இதுதான்: ''முதல் முறையாக என்னை அவர் ரூமுக்கு அழைத்து சென்றார். தன் பக்கத்தில் உட்காருமாறு சொன்னார். ஏற்கனவே பலமுறை படிப்பிற்காக அவரை சந்தித்திருப்பதால், எனக்கு அவர் மீது ஒரு மரியாதை இருந்தது.

ஷாக்
பிறகு அவருடைய செல்போனை எடுத்து என்னிடம் தந்து அதை பார்க்குமாறு சொன்னார். அதை பார்த்ததும், நான் ஷாக் ஆகிவிட்டேன். அதில் நான் நிர்வாணமாக குளித்த வீடியோ இருந்தது. உடனே நான் அழ ஆரம்பித்ததும், அவர் சிரிக்க ஆரம்பித்தார்.

வைரல்
இந்த வீடியோ வெளியே போககூடாது என்றால், என் தேவையை நிறைவேற்று, இல்லாவிட்டால் இந்த வீடியோ வைரலாகும், உன் குடும்பத்தையும் கொன்னுடுவேன் என்றார். பிறகு நிர்வாணமாக ஆயில் மசாஜ் செய்ய சொன்னார். நான் மாட்டேன் என்றதும், என்னை அடித்து சித்ரவதை செய்தார்.

நிர்வாண நிலை
தினமும் காலைல 6 மணி ஆயிடுச்சுன்னா நான் நிர்வாண மசாஜ் செய்துவிடணும். மதியானம் 2.30 மணிக்கு சின்மயானந்தாவின் தனி அறைக்கு செல்ல வேண்டும். அவர் என்னை அப்போது வன்கொடுமை செய்வார். மாதவிடாய் என்றாலும் விடமாட்டார். இந்த நரக வேதனையை எல்லாரிடமும் சொல்லி அழுதேன். யாருமே என்னை நம்பல. ஆதாரம் இருக்கான்னு கேட்டாங்க.

வாக்குமூலம்
அப்போ இருந்துதான், நான் ஆதாரங்களை திரட்ட முடிவு செய்தேன். பேனா, மூக்குக்கண்ணாடியில் இருக்கும் ரகசிய கேமரா இருப்பது தெரிந்து, அதன்படியே ஒரு மூக்குக்கண்ணாடியை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். அதை வைத்துதான் அவர் எனக்கு செய்த கொடுமைகளை வீடியோ எடுத்தேன். அப்பதான் எனக்கு தைரியமே வந்தது" என்று தெரிவித்துள்ளார். மாணவியின் இந்த வாக்குமூலம் வைரலாகி வரும் நிலையில், தற்போது அவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications