வாலை சுருட்டும் கொரோனா.. 2 டோஸ் போட்டால்.. 98% பாதுகாப்பு கிடைக்குமாம். மத்திய அரசு தகவல்

2 டோஸ்களை போட்டுக் கொண்டால் உயிரிழப்புகளை தடுக்கலாம் என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தடுப்பூசிதான் நமக்கெல்லாம் இப்போதைக்கு ஒரே தீர்வு என்று, மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இபபோது தடுப்பூசி போட்டுக்கொண்டால் தொற்று பாதிப்பால் உயிருக்கு ஆபத்தில்லை என்பது நிரூபணமாகி உள்ளது..!

இந்த கொரோனா புதுவித வைரஸ்.. இது என்ன வைரஸ்? இதன் தாக்கம் என்ன? என்பது குறித்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இன்னொரு பக்கம் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளும் உலகமெல்லாம் நடந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் தடுப்பூசி மட்டுமே தற்காலிக தீர்வு என்ற முடிவுக்கு உலக நாடுகள் வந்தன.. அந்த வகையில், தடுப்பூசிகளை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்கான முயற்சியிலும் இறங்கின.. இதை அனைத்து நாடுகளுமே சீரியஸாக எடுத்து கொண்டன.. இந்தியாவிலும் அப்படித்தான் முன்னெடுக்கப்பட்டது.

மரணம்

மரணம்

அதிலும் முதலாம் அலையைவிட இந்த இரண்டாவது அலை அதிக பேரை காவு வாங்கிவிட்டது.. உயிரிழப்புகளை கண்ணால் கண்டு, நாட்டு மக்கள் அதிர்ந்து போய்விட்டனர்.. பயமும் ஒட்டிக் கொண்டது.. அதற்குபிறகு தானாகவே தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஆர்வம் வந்தது.. இறுதியில் தொற்று நமக்கு மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருக்கிறது.

 நிதி ஆயோக்

நிதி ஆயோக்

இப்படிப்பட்ட சூழலில்தான், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டது... அந்த ஆய்வின் முடிவில், தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று கூறப்பட்டுள்ளது.. இநத் தகவலை நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார்

போலீசார்

இதைபற்றி அவர் மேலும் சொல்லும்போது, "போலீசார் அதிக ஆபத்தான சூழலில் பணியாற்றுவதால் அவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.. தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 4 ஆயிரத்து 868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்ததும், தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது. ஆனால் 2 டோஸ்களும் போட்டுக்கொண்ட 42 ஆயிரத்து 720 பேரை டெஸ்ட் செய்ததில் 2 பேர் மட்டுமே உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 காய்ச்சல்

காய்ச்சல்

அதாவது, ஒரு டோஸ் தடுப்பூசி 92 சதவீதம் பாதுகாப்பானது என்றும், 2 டோஸ்கள் 98 சதவீதம் பாதுகாப்பானது என்றும் தெரியவந்துள்ளது.. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே வந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்... கொரோனா உயிரிழப்புக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

 3வது அலை

3வது அலை

3வது அலை வருவதெல்லாம் நம்ம கையில் இல்லை.. ஆனால், அதனை எதிர்கொள்வதற்கான தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்... குறிப்பாக கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும்... குழந்தைகளுக்கான படுக்கைகள், ஐசியூ வசதிகள், மருந்துகளை தயாராக வைக்க வேண்டும். மக்கள் எல்லாரும் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக முழுமையாக கடைப்பிடித்தால் நிச்சயம் 3வது அலை வராமல் தடுக்க முடியும்." என்று வி.கே.பால் தெரிவித்தார். " என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+