“முஸ்லீம்களின் நம்பிக்கையை சிதைச்சிட்டீங்க”.. ஜேடியு தலைவர்கள் ராஜினாமா.. நிதிஷ் குமாருக்கு ஷாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி மற்றும் அக்கட்சியின் மாநில நிர்வாகி கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வக்பு வாரிய மசோதாவுக்கு ஜேடியு ஆதரவு அளித்ததன் மூலம் முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக ஜேடியு எம்.பி முகமது அஷ்ரப் அன்சாரி அறிவித்தார்.

2 JDU leaders including MP resigns from party over its support for Waqf Bill

வக்பு வாரிய சட்டம்

வக்பு வாரிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர்.

இந்த மசோதாவிற்கு பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்து உள்ளன. இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி முகமது காசிம் அன்சாரி மற்றும் முன்னணி தலைவர் முகமது நவாஸ் மாலிக் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளனர்.

ஜேடியு எம்.பி ராஜினாமா

கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்கள் ஜேடியு-வை நம்பியதாகவும், வக்பு மசோதாவுக்கு ஆதரவளித்து முஸ்லிம் மக்களின் அந்த நம்பிக்கையை ஜேடியு இழந்துவிட்டதாகவும் அவர்கள், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளனர்.

மக்களவையில் ஜேடியு தலைவர் லாலன் சிங் ஆற்றிய உரையை அக்கட்சியின் மற்றொரு எம்.பியுமான அன்சாரி விமர்சித்துள்ளார். இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை ஏற்படுத்துவது என விமர்சித்துள்ளார்.

நிதிஷ் குமாருக்கு கடிதம்

நிதிஷ் குமாருக்கு அவர் எழுதிய கடிதத்தில், "எங்களைப் போன்ற மில்லியன் கணக்கான இந்திய முஸ்லிம்கள் உண்மையான மதச்சார்பற்ற சித்தாந்தத்தின் கொடி ஏந்தியவர் என்ற வகையில் உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தனர். இருப்பினும், அந்த நம்பிக்கை இப்போது சிதைந்துவிட்டது. வக்ஃப் மசோதா திருத்தச் சட்டம் விவகாரத்தில் ஜேடியு எடுத்த நிலைப்பாடு, லட்சக்கணக்கான அர்ப்பணிப்புள்ள இந்திய முஸ்லிம்களையும் ஆர்வலர்களையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

லாலன் சிங் தனது உரையை நிகழ்த்திய விதம் மற்றும் மக்களவையில் இந்த மசோதாவை ஆதரித்த விதம் குறித்து நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம். வக்ஃப் மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது, அதை எந்த சூழ்நிலையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மசோதா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பல அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இது இந்திய முஸ்லிம்களை அவமானப்படுத்துகிறது.

நீங்களோ அல்லது உங்கள் கட்சியோ இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. எனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை கட்சிக்காக அர்ப்பணித்ததற்கு நான் வருந்துகிறேன். எனவே, நான் தானாக முன்வந்து முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும், கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்." என்று தெரிவித்தார்.

மற்றொரு தலைவரும் ராஜினாமா

மேலும், ஜேடியு கட்சியின் மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக்கும் தனது பதவியை ராஜினாமா செய்தார். வக்ஃப் மசோதாவிற்கு ஜேடியு ஆதரவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேடியுவின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ஜமுய் நகரில் உள்ள ஆதாவில் வசிக்கும் மாலிக், சமூக ஊடகங்களில் தனது ராஜினாமாவை அறிவித்தார். அவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில், முஸ்லிம்கள் தன் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் லாலன் சிங்கின் அறிக்கை மற்றும் மசோதா குறித்த ஜேடியுவின் நிலைப்பாடு குறித்தும் மாலிக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+