ராஜஸ்தானில் தீ விபத்தில் சிக்கிய பேருந்து! 20 பேர் உடல் கருகி பலி! உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்
டெல்லி: ராஜஸ்தானில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், பேருந்தில் பயணித்தவர்களில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தீ விபத்து குறித்து உடனடியாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும், ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் இறங்கினர். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ஜெய்சல்மேர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில், குளிர்சாதன பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின்புறம் இருந்து புகை வந்திருக்கிறது. இதனையடுத்து பேருந்தை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் கீழே இறங்கியுள்ளார். ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியுள்ளது. பேருந்தின் குளிர்சாதனப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதுவே பேருந்து முழுவதும் தீ பரவ காரணம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பேருந்தில் 19 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒருவர் ஜோத்பூர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த துயரச் சம்பவத்திற்கு முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா இரங்கல் தெரிவித்தார். விபத்தின் தீவிரத்தை அறிந்த அவர் ஜெய்சல்மேருக்கு விரைந்து சென்றார்.
ஜெய்சல்மேர் நகராட்சி மன்றத்தின் உதவி தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணபால் சிங் ரத்தோர் கூறுகையில், 4 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட சுமார் 15 பயணிகள் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை 125-ல் கிரீன் காரிடார் அமைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையை விரைவில் சென்றடைய உதவும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்று கூறியிருக்கிறார்.
ஜெய்சல்மேரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் பிற்பகல் 3:30 மணியளவில் பேருந்தின் பின் பகுதியில் இருந்து புகை வந்ததை பயணிகள் முதலில் கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 57 பயணிகளுடன் ஜோத்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில், பயணிகள் அனைவரும் இறங்குவதற்குள் தீ மளமளவென பரவியது. உள்ளூர் கிராம மக்களும், அவ்வழியாக சென்றவர்களும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மூன்று ஆம்புலன்ஸ்கள் மூலம் சில காயமடைந்தவர்கள் ஜெய்சல்மேரில் உள்ள ஜவஹிர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பல பயணிகளுக்கு முகம், கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் கூறுகையில், "பேருந்தை முதலில் பார்த்தபோது அது ஏற்கனவே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. மக்கள் உதவி கேட்டு அலறிக் கொண்டிருந்தனர். ஒருவர் தரையில் மயங்கி விழுந்தார். நான் பலத்த தீக்காயம் அடைந்த ஒருவரை எனது பைக்கில் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்து சென்றேன். பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று அமீர் கான் எனும் உள்ளூர் இளைஞர் கூறியிருக்கிறார்.
காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications