டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக் சபா தேர்தல் மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் இடையில்தான்.. மெகா கூட்டணி பற்றி மோடி விமர்சனம்!

வரும் நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கும், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் எதிராக நடக்கும் தேர்தல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கும், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் எதிராக நடக்கும் தேர்தல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 4 வருடமாக செய்தியாளர்களை நேரில் சந்தித்து பேசவே இல்லை. இது பெரிய விமர்சனத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார்.வரும் மே மாதம் தேர்தல் நடக்க உள்ளதாக தகவல்கள் வருகிறது.

2019 elections would be Janta versus gathbandhan says PM MODI to ANI

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கிடையாது: மோடி திட்டவட்ட அறிவிப்பு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கிடையாது: மோடி திட்டவட்ட அறிவிப்பு

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவன ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு பிரதமர் மோடி அளித்துள்ளார் . இந்த பேட்டி பெரிய வைரலாகி உள்ளது.

அதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி. எங்களுக்கும் வேறு யாருக்கும் போட்டி கிடையாது.

நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான். சாமானிய மக்களின் சார்பாக நான் போட்டியிட உள்ளேன். இத்தனை வருடமாக ஒரு குடும்பம்தான் நாட்டை ஆண்டு வந்தது. இப்போது மக்கள் ஆண்டு வருகிறார்கள்.

2019 தேர்தலில் மக்கள்தான் வெற்றி பெறுவார்கள். மெகா கூட்டணி தோல்வியை தழுவ போகிறது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.

English summary
PM MODI to ANI on whether 2019 elections would be anybody vs Modi: It is going to be 'Janta' versus 'gathbandhan'. Modi is just a manifestation of public love and blessings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X