அடுத்தடுத்து 23 மருத்துவர்களுக்கு கொரோனா.. கடும் அழுத்தத்தில் சுகாதார கட்டமைப்பு? ஓமிக்ரான் பாதிப்பா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரு மருத்துவமனையில் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு ஏற்பட்டது ஓமிக்ரான் பாதிப்பா என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.

ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியா மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

இந்தியாவில் ஏற்கனவே ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துவிட்டது. உண்மையான பாதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

 ஓமிக்ரான் பாதிப்பு

ஓமிக்ரான் பாதிப்பு

இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. வரும் காலங்களில் ஓமிக்ரான் கொரோனாவால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படும் நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

 23 பேருக்கு ஓமிக்ரான்

23 பேருக்கு ஓமிக்ரான்

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் சுமார் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் வெறும் ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவமனையிலேயே பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஓமிக்ரான் பாதிப்பா

ஓமிக்ரான் பாதிப்பா

அவர்களுக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே இருப்பதால் அவர்கள் சுயதனிமையில் உள்ளனர் என்றும் அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படவில்லை என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவர்களில் யாருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு இதுவரை உறுதியாகவில்லை. அவர்களின் மாதிரிகள் கொரோனா வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான முடிவுகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    புதுச்சேரி: 2 டோஸ் தடுப்பூசி போடலயா? சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பு… அதிரடி உத்தரவு!
     தலைநகர் டெல்லி

    தலைநகர் டெல்லி

    தலைநகர் டெல்லியில் நேற்று மட்டும் 4,099 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேபோல பாசிட்டிவ் விகிதமும் 6.46 சதவீதமாக உயர்ந்துள்ளது கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வந்தாலும் கூட அவர்களில் மருத்துவ உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். அதேபோல தலைநகர் டெல்லியில் பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து அவசர ஆலோசனையை நடத்தியது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+