"இந்தியா ஜிந்தாபாத்.." ஆனந்த கண்ணீர்விடும் பாகிஸ்தானியர்கள்.. நடுக்கடலில் பயங்கரம்! என்ன காரணம்
டெல்லி: அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்ட பாகிஸ்தான் மீனவர்களை இந்தியக் கடற்படை பத்திரமாக மீட்ட நிலையில், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் மீனவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மத்திய தரைக்கடல், அதையொட்டி உள்ள பகுதியில் கடந்த சில காலமாகவே மோசமான சூழல் நிலவி வருகிறது. அங்கே செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பங்களும் கடத்தப்படும் சம்பமும் அதிகரித்து வருகிறது.

கடத்தல்: அப்படி தான் அரபிக்கடல் பகுதியில் ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்று கடந்த மார்ச் 28ஆம் தேதி சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். கப்பலில் ஏறிய 9 கடற்கொள்ளையர்கள் அதைத் தங்கல் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாகக் கப்பலில் இருந்து ஆபத்துக் காலங்களில் வரும் எஸ்ஓஎஸ் மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர்களுக்கு இந்தியக் கடற்படை உதவிக்கு விரைந்துள்ளது.
சுமார் 12 மணி நேரம் நீட்டித்த ஆப்ரேஷனில் அந்த மீன்பிடி கப்பலை மீட்டனர். சோமாலியாவைச் சேர்ந்த அந்த கடற்கொள்ளையர்கள் வேறு வழியில்லாததால் சரணடைந்துள்ளனர். ஈரான் நாட்டை சேர்ந்த அந்த மீன்பிடி கப்பல் உள்ளே பிறகு 23 ஊழியர்களும் மீட்கப்பட்டனர். உள்ளே இருந்த அவர்கள் அனைவருமே 23 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களாகும்.
இந்தியக் கடற்படை: இது தொடர்பாக இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஈரான் நாட்டை சேர்ந்த மீன்பிடிக் கப்பலான 'அல்-கம்பார் 786' கடந்த மார்ச் 28ஆம் தேதி மாலை கடற்கொள்ளையர்கள் கடத்தியதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக அரபிக்கடலில் கடல்சார் பாதுகாப்பிற்கு நிலைநிறுத்தப்பட்டு இருந்த இரண்டு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் இதில் தலையிட்டன.
சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த ஆப்ரேஷனை தொடர்ந்து கடற்கொள்ளையர்கள் சரணடைந்தனர். கப்பலில் உள்ள 23 பாகிஸ்தானியர்கள் மீட்கப்பட்டனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ: இதற்கிடையே அரபிக்கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இந்த 23 பாகிஸ்தானியர்கள் குறித்த வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் தங்களைப் பத்திரமாக மீட்ட இந்தியக் கடற்படைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த பாகிஸ்தானியர்கள் "இந்தியா ஜிந்தாபாத்" என்று முழக்கமிடுகிறார்கள். இது குறித்த 40 நொடிகள் ஓடும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நாலா பக்கமும் கடற்கொள்ளையர்கள்.. கதறி துடித்த பாகிஸ்தானியர்கள்.. தக்க நேரத்தில் உதவிய இந்திய கடற்படை
நன்றி: அதில் கப்பலில் மீட்கப்பட்ட அனைத்து பாகிஸ்தானியர்களும் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள். நடுவில் இருக்கும் ஒருவர் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குகிறார். மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது சோமாலியா கடற்கொள்ளையர்கள் தங்களைக் கடத்தியதாகவும் அப்போது இந்தியா தான் தக்க நேரத்தில் உதவியதாகவும் அவர் கூறுகிறார். இதையடுத்து அவர்கள் அனைவரும் "இந்தியா ஜிந்தாபாத்" என்று முழக்கமிடுகிறார்கள்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரச்சினையில் சிக்கும் கப்பல்கள் அல்லது படகுகளுக்கு இந்தியக் கடற்படை உதவுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல முறை கப்பல்களுக்கு இந்தியக் கடற்படை உதவி இருக்கிறது. இம்மாத தொடக்கத்தில் ருயென் என்ற கப்பலைக் கடற்கொள்ளையர்கள் தாக்கிய போதும் அவர்களுக்கும் தக்க நேரத்தில் உதவியது. 35 கடற்கொள்ளையர்கள் அதில் ஏறி இருந்த நிலையில், அவர்கள் அனைவரையும் சரணடைய வைத்தது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications