தமிழக காவல்துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்.. குடியரசு தினவிழாவையொட்டி வெளியான முழு லிஸ்ட்
டெல்லி: குடியரசு தினவிழாவையொட்டி மெச்சத்தக்க சேவை பிரிவில் தமிழகத்தை சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கும், சிறப்பாக பணியாற்றியதாக 21 பேருக்கும் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறைத்துறையில் 4 பேர், ஹோம்கார்ட் மற்றும் சிவில் டிபென்ஸ் பிரிவில் ஒருவருக்கும் பதக்கம் என்பது வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி காவல் துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படையினரின் சேவையை பாராட்டி ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை கொண்டாடப்படும் குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி பதக்கம் வென்றவர்களின் லிஸ்ட்டை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் 942 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு. காவல்துறை, தீயணைப்பு படை, ஊர்க்காவல் படை, ஆயுதப்படையில் சிறப்பாக பணியாற்றியோருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழக காவல்துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது. இதில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய 2 பேருக்கும், சிறப்பாக பணியாற்றிய 21 பேருக்கும் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு எந்த பதக்கமும் கிடைக்கவில்லை. ஊர்க்காவல் படை மற்றும் சிவில் டிபென்ஸ் பிரிவில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய ஒருவருக்கு பதக்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றியதாக தமிழ்நாட்டில் ஐஜியாக இருக்கும் துரை குமார் மற்றும் ராதிகா ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் எஸ்பி பாஸ்கரேனுக்கும் இந்த பிரிவில் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பிரிவில் காவல்துறையை சேர்ந்த 21 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி எஸ்பிக்களாக உள்ள ஜெயலட்சுமி, ஸ்டாலின், பிரபாகர், கூடுதல் எஸ்பிக்களாக உள்ள தினகரன், பிரபாகரன், துணை எஸ்பியாக உள்ள மதியழகன், பாபு, சந்திரசேகரன், வேலு, ஜெடிடியா, உதவி கமிஷனராக உள்ள வீரபாண்டி, கணேஷ், பிரதீப் பிரேம் குமார், தென்னரசு உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இவர்கள் தவிர இன்ஸ்பெக்டர்களாக உள்ள எஸ் அகிலா, எம் குமார், விஜயலட்சுமி, சப் இன்ஸ்பெக்டராக உள்ள சிவக்குமார், குமார், துணை கமாண்ட்டன்ட் எஸ் அசோகன், உதவி கமாண்டன்ட் சுரேஷ் குமார் என்று 21 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது.
சீர்த்திருத்தம் மேற்கொண்டதாக (Correctional Service) தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சிறைத்துறையில் தலைமை ஹெட் வார்டனாக பணியாற்றி ஜோதி ராமலிங்கம், கண்ணன், உதவி ஜெயிலர் காளியப்பன், உதவி ஜெயிலர் சரவணன் ஆகியோருக்கும் ஜனாதிபதி பதக்கம் அளிவிக்கப்பட்டுள்ளது.
ஹோம் ஹார்ட் மற்றும் சிவில் டிபென்ஸ் பிரிவில் தமிழ்நாட்டில் உதவி கமாண்டண்ட் ஜெனரல் மஞ்சீத் சிங் நாயருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது. இந்த முறை தமிழகத்தில் தீயணைப்பு துறையில் யாருக்கும் ஜனாதிபதி பதக்கம் என்பது கிடைக்கவில்லை. பதக்கம் வென்றவர்களுக்கு நாளை குடியரசு தினவிழாவின்போது ஜனாதிபதி பதக்கம் என்பது வழங்கப்பட உள்ளது












Click it and Unblock the Notifications