டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா; மகாராஷ்டிராவில் தொடரும் உச்சம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 551 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். மகாரஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பின் உச்சம் நீடித்து வருகிறது.

Recommended Video

    Amitabh Bachchan Abhishek bachchan ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டும் 551 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,49,553 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 22,000க்கும் அதிகமான ஒருநாள் பாதிப்பு என்பது 9-வது நாளாக நீடிக்கிறது.

     கொரோனா: மதுரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஒரே நாளில் 929 பேர் வீடு திரும்பினர் கொரோனா: மதுரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஒரே நாளில் 929 பேர் வீடு திரும்பினர்

    கொரோனா மரணங்கள் எண்ணிக்கை

    கொரோனா மரணங்கள் எண்ணிக்கை

    இவர்களில் 5,34,621 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 22,674 பேர் மரணமடைந்துள்ளனர் என்கிறது மத்திய சுகாதார அமைச்சகம். மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகியவற்றில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

    2-வது இடத்தில் மகாராஷ்டிரா

    2-வது இடத்தில் மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,46,000 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,116 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,36,985 பேர் கொரோனாவால் குணமடைந்தும் உள்ளனர். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

    தமிழகம், டெல்லியில் பாதிப்பு

    தமிழகம், டெல்லியில் பாதிப்பு

    தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 1,34,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,898. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை மொத்தம் 85,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து டெல்லி 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

    டெல்லி, குஜராத், ராஜஸ்தான்

    டெல்லி, குஜராத், ராஜஸ்தான்

    டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,10,921; இதுவரை மொத்தம் 3,334 பேர் உயிரிழந்து உள்ளனர். குஜராத்தில் 2,031 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். 40,941 பேர் குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் 35,092; தெலுங்கானாவில் 33,402; கர்நாடகாவில் 36,216 ; மேற்கு வங்கத்தில் 28,453; ராஜஸ்தானில் 23,748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    28,637 Coronavius cases and 551 deaths reported in India in the last 24 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X