டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரியங்கா காந்தி வீட்டுக்குள் சர்ரென கார் சென்ற விவகாரம்.. 3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரியங்கா காந்தி வீட்டுக்குள் பாதுகாப்பு வளையத்தை மீறி கார் ஒன்று சென்றது தொடர்பாக 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் எம்பியுமான ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த பாதுகாப்பை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுவிட்டது. இதற்கு பதிலாக சிஆர்பிஎஃப்பின் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அது நடைமுறைக்கும் வந்துவிட்டது.

ஒரே நாடு ஒரே ரேஷன்.. ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும்.. மத்திய அமைச்சர்ஒரே நாடு ஒரே ரேஷன்.. ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும்.. மத்திய அமைச்சர்

பாதுகாப்பு வளையம்

பாதுகாப்பு வளையம்

அதே நேரத்தில் சோனியா காந்தியின் குடும்பத்துக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு கமாண்டோக்களை ரத்து செய்தது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் எழுப்பியது. இந்த நிலையில் சோனியா மகள் பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் 25-ஆம் தேதி முன்னர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு கார் சென்றது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் எஸ்பிஜி சட்டதிருத்த மசோதா ராஜ்யசபாவில் நேற்று விவாதத்துக்கு வந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அவர் கூறுகையில் அன்றைய தினம் பிரியங்காவின் வீட்டுக்கு ராகுல் காந்தி வரவிருப்பதாக சிஆர்பிஎஃப்புக்கு தகவல் கிடைத்தது.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

அந்த நேரத்தில் ஒரு கார் நுழையவும் அது ராகுல்காந்தியின் கார் என கருதி அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது தற்செயலாக நடந்தது. அந்த காரில் வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள்தான்.

3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உயர்நிலை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

English summary
Home Minister Amit Shah explains that 3 police officials were suspended after security breach at Priyanka Gandhi's house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X