டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக ஆட்சி மீண்டும் வருமா இல்லையா என்பதை தீர்மானிக்க போகும் 3 மாநிலங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக கூட்டணிக்கே வெற்றி ! சி வோட்டர் அதிரடி கணிப்பு!

    டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய 3 மாநிலங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்பதுதான் பெரும்பான்மை எக்ஸிட் போல் கருத்தாக உள்ளது.

    7 கட்டங்களாக நடைபெற்ற, லோக்சபா தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், பல்வேறு முன்னணி டிவி சேனல்களும் எக்ஸிட் போல்களை வெளியிட்டன. அதில், கவனிக்க வேண்டிய அம்சம், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப்போகிறது என்பதுதான்.

    மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க 272 சீட்கள் தேவை. இதை பாஜக தனித்து பெறுகிறதோ இல்லையோ, கூட்டணி பலத்தால் பெற்றுவிடும் என்பதுதான் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் சொல்லும் சேதியாக உள்ளது.

    ஸ்டாலின் வீட்டுக்கு வந்து கேசிஆர் டீ சாப்பிட்டதெல்லாம் வீணாப் போச்சே.. குண்டைப் போட்ட எக்ஸிட் போல்! ஸ்டாலின் வீட்டுக்கு வந்து கேசிஆர் டீ சாப்பிட்டதெல்லாம் வீணாப் போச்சே.. குண்டைப் போட்ட எக்ஸிட் போல்!

    3 மாநிலங்கள்

    3 மாநிலங்கள்

    பாஜக ஆட்சியமைக்க 3 மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது என்று எக்ஸிட் போல்கள், ஏறத்தாழ ஒரே மாதிரி சொல்கின்றன. உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள்தான் அவை. இங்கு மொத்தம் 143 எம்பி சீட்கள் குவிந்து கிடக்கின்றன. எனவே, இங்கு பாஜக சிறப்பாக செயல்படுவது என்பதே, ஆட்சியை பிடிக்க பாதி கிணறு தாண்டியதைப்போலத்தான்.

    உத்தரபிரதேசம்

    உத்தரபிரதேசம்

    உத்தர பிரதேசத்தில், மகாகட்பந்தன் கூட்டணி 40 தொகுதிகளையும், பாஜக 38 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும் வெல்லும் என கணித்துள்ளது ரிபப்ளிக் டிவி-சிஓட்டர் சர்வே. ஆனால் பிற சர்வேக்கள் பாஜக இன்னும் அதிக தொகுதிகளை வெல்லும் என்றே சொல்கின்றன. டைம்ஸ்நவ்-விஎம்ஆர் போல் கணிப்புப்படி, மகாகட்பந்தன் 20, பாஜக 58 தொகுதிகளை வெல்லுமாம். டுடேஸ் சாணக்யா கணிப்போ பாஜக 65 தொகுதிகளை இங்கு வெல்லும் என்கிறது. மகாகட்பந்தனுக்கு 13 தொகுதிகள்தானாம். ஆஜ்தக்-ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புப்படி, அதிகபட்சம் 68 தொகுதிகளை பாஜக வெல்லுமாம்.

    மேற்கு வங்கம் நிலவரம்

    மேற்கு வங்கம் நிலவரம்

    மேற்கு வங்கத்தை பொறுத்தளவில், மொத்தம் 42 தொகுதிகள். கடந்த முறை பாஜக இரு தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஆனால், இம்முறை, பாஜக 19-23 தொகுதிகளை வெல்லும் என்கிறது ஆஜ்தக் சர்வே. திரிணாமுல் காங்கிரசுக்கு, 19-22 தொகுதிகள் கிடைக்கலாம். பிற சர்வேக்கள், இந்த அளவுக்கு அதிகம் பாஜகவுக்கு தரவில்லை. இருப்பினும், கணிசமாக வெல்ல வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றன. டுடேஸ் சாணக்யா கணிப்புப்படி பாஜகவுக்கு 18, டைம்ஸ்நவ் கணிப்புப்படி பாஜகவுக்கு 11 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். இது பாஜகவுக்கு அம்மாநிலத்தில் பெரிய வளர்ச்சிதான்.

    ஒடிசா

    ஒடிசா

    2014ம் ஆண்டு தேர்தலில் 1 தொகுதியை மட்டுமே ஒடிசாவில் பாஜக வென்றது. பிஜு ஜனதாதளம் 20 தொகுதிகளை வென்றது. 21 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், இம்முறை, பிஜு ஜனதாதளம் பூஜ்யம்தான் பெறும் என்கிறது ஆஜ்தக் கருத்துக் கணிப்பு. பாஜக 15-19 தொகுதிகளை வெல்ல வாய்ப்பாம். டைம்ஸ்நவ் மற்றும் ரிபப்ளிக் டிவி சேனல்களின் சர்வேப்படி, பாஜக முறையே 12 மற்றும் 10 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டுடேஸ்சாணக்யா கணிப்புப்படி பாஜகவுக்கு 14 சீட்கள் கிடைக்க வாய்ப்பாம்.

    வளர்ச்சி

    வளர்ச்சி

    கடந்த முறையை காட்டிலும் உபியில் சில தொகுதிகளை பாஜக இழந்தாலும், மேற்கு வங்கம், ஒடிசா கணக்கை வைத்து அதை சரி கட்டிவிடும் என்பதே எக்ஸிட்போல்கள் சொல்லும் சேதி. எனவே, இந்த மூன்று மாநிலங்களிலும் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளதை வைத்தே பாஜக கூட்டணியால் மத்தியில் ஆட்சியை பிடித்துவிட முடியும் என்கிறார்கள் அரசியல் பண்டிதர்கள்.

    English summary
    BJP’s performance in three states Uttar Pradesh, West Bengal and Odisha which account for 143 seats, will play key roll in the Loksabha election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X