மத்திய பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி! டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள்! பதறி ஓடிய அமைச்சர்கள்!
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவதற்காக 200க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 மத்திய அமைச்சர்கள் விரைந்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு 2020-ல் கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக வரலாறு காணாத வகையில் கடும் பனி, குளிர், வெயிலுக்கு இடையே ஓராண்டு காலம் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டங்களில் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் விளைவாக சர்ச்சைக்குரிய3 விவசாய சட்டங்களை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. பிரதமர் மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை; ஆகையால் டெல்லியில் பிப்ரவரி 13-ந் தேதி மீண்டும் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம் என 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அறிவித்தன. இப்போராட்டத்தில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்கள் உள்ளிட்டவைகளில் டெல்லியை முற்றுகையிட்டனர். இதனால் டெல்லி எல்லையான நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நொய்டா அருகே மேம்பாலத்தில் இருந்து டெல்லி நோக்கி நேற்று விவசாயிகள் பேரணியாக புறப்பட முயன்றனர். ஆனால் போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புகளை மீறி பலர் முன்னேறிச் சென்றனர். இதனையடுத்து நடு சாலையிலேயே அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனையடுத்து பிற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மீண்டும் ஒன்று திரண்டுவிடாமல் தடுக்க டெல்லி எல்லைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. போலீசாருடன் துணை ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டது.
தற்போதும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டிருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 மத்திய அமைச்சர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications