தமிழ்நாடு vs கர்நாடகா: மீண்டும் விஸ்வரூபமாகும் காவிரி.. மே 21-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் வரும் 21-ந் தேதி ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்கவே முடியாது என கர்நாடகா பிடிவாதம் பிடிக்கும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடிப்படையில் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டன. கர்நாடகாவில் மழை அளவு, அணைகளின் நீர் அளவு உள்ளிட்டவைகளை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பகிர்வு அளவை பரிந்துரைப்பதுதான் காவிரி ஒழுங்காற்று குழு. இந்த குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கும். இதனை பரிசீலனை செய்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிடக் கூடியது காவிரி மேலாண்மை ஆணையம்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் கடந்த ஏப்ரல் 4-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான 3.6 டிஎம்சி தண்ணீரை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்குரியது) கர்நாடகா உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழ்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் கர்நாடகா அதிகாரிகளோ, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்கவே முடியாது என்றனர். கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது எனவும் அவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனையும் கர்நாடகா அரசு ஏற்க மறுத்து தண்ணீரை திறந்துவிடவில்லை.
தற்போது மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் மே 21-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இக்கூட்டத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை: தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கான காவிரி நீர்வரத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் 33 கன அடியாக இருந்தது. இது பின்னர் 57 அடியாக உயர்ந்தது. தற்போது 138 கன அடியாக அதிகரித்தும் உள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 50.57 அடி; மேட்டூர் அணையின் நீர் இருப்பு 18.17 டி.எம்.சி ஆகும்.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications