பெரும் எதிர்பார்ப்புக்கிடையே.. லோக்சபாவில் தாக்கலானது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்து உள்ளார்.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட இருப்பதாக மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் திடீரென இப்படி ஒரு சிறப்புக் கூட்டத் தொடர் கூட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட நிலையில், இக்கூட்டத்தொடரில் இதில் விவாதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. மேலும் ஜி 20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்து அழைப்பிதழில், பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டு இருந்ததால் நாட்டின் பெயர் பாரத் எனவும் மாற்றப்படலாம் என்று செய்திகள் கசிந்தன.
மேலும் டிசம்பர் மாதமே மத்திய அரசு மக்களவைத் தேர்தலை நடத்த முடிவு செய்து இருப்பதால் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டுவதாகவும் கூறப்பட்டது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி நிறைவடைகிறது.

நேற்றைய அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால சிறப்புகள், முக்கிய முடிவுகளை, நிகழ்வுகளை குறிப்பிட்டு வரலாறு குறித்து பேசினார். அவரை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூர்ந்தனர். நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்த முக்கிய கோரிக்கையான பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பிரியா விடை கொடுத்தனர்.

இன்று மதியம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்து இருக்கிறார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications