டெல்லியில் விஸ்வரூபம்: 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள், 402 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு
டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிஉச்சமாக பரவி வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் மற்றும் 402 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் நேற்று மட்டும் நாடு முழுவதும் கொரோனாவால் 327 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் சனிக்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,181 ஆக பதிவாகி இருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 11,869 பேர் குணடைந்துள்ளனர். மேலும் நேற்று கொரோனாவால் 7 பேர் உயிரிழந்தனர்.

டெல்லியில் அதிகரிப்பு
டெல்லியில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை- ஆக்டிவ் கேஸ்கள் 48,178. டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் டெல்லியில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா
இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற பணியாளர்கள் மொத்தம் 1409 பேருக்கு ஜனவரி 4-ந் தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா, ராஜ்யசபா ஊழியர்கள்
நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் பணியாற்றும் 200 பேர், ராஜ்யசபா பணியாளர்கள் 69 பேர், இதர துறை பணியாளர்கள் 133 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நாடாளுமன்ற பணியாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் 50% பணியாளர்களை மத்திய அரசு வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்திருந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கொரோனா
இதனிடையே உச்சநீதிமன்ற நீதிபதிகள் 32 பேரில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 150 உச்சநீதிமன்ற பணியாளர்கள் கொரோனா பாதிப்பு அல்லது கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா, கொரோனா பாதிப்பு தொடர்பாக நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். மேலும் நேரடி விசாரணைகளையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications