Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா; 445 பேர் மரணம்; 2-வது இடத்தில் டெல்லி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 445 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு முன் எப்போதையும்விட படுவேகமாக பரவி வருகிறது. உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு 90 லட்சத்தை தாண்டிவிட்டது.

 உலக நாடுகளில்...

உலக நாடுகளில்...

அனைத்து நாடுகளிலும் இதுவரை மொத்தம் 90,50,891 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா மரணங்கள் 4,70,795 ஆகவும் அதிகரித்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 24 மணிநேரத்தில் 445 பேர் மரணம்

24 மணிநேரத்தில் 445 பேர் மரணம்

மேலும் இந்தியாவில் 24 மணிநேரத்தில் 445 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் முதல் முறையாக மிக அதிகமாக உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,25,282 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13699 ஆக உயர்ந்துள்ளது.

 மகாராஷ்டிரா, டெல்லி

மகாராஷ்டிரா, டெல்லி

மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 1,32,075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,170 ஆக உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு 59,746 ஆகவும் மரணங்கள் 2,175 ஆகவும் இருக்கிறது.

Recommended Video

    China-வில் Corona Second Wave..மூடப்படும் தலைநகர் Beijing
     தமிழகம், குஜராத் நிலவரம்

    தமிழகம், குஜராத் நிலவரம்

    நீண்டகாலம் 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 59,377. இங்கு மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 757 ஆகும். 4-வதாக குஜராத் மாநிலம் உள்ளது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,317 ஆக இருக்கிறது. இங்கு கொரோனாவால் மொத்தம் 1,664 பேர் உயிரிழந்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+