டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் 9 பேருக்கு 'டெல்டா பிளஸ்'.. நாட்டில் மொத்தம் 48 பேருக்கு உறுதி.. மத்திய அரசு ஹைஅலர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 11 மாநிலங்களில் மிகவும் ஆபத்தான டெல்டா பிளஸ் தொற்று 48 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 9 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Delta Plus Virus நிலை என்ன? | Girl Child needs funds | SMA disorder | Oneindia Tamil

    மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் அதிதீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா பிளஸ் வேரியண்ட் கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

    மத்திய அரசின் அறிவிப்பின் படி, நாட்டில் மொத்தம் 48 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 9 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்கு எவ்வளவு

    எங்கு எவ்வளவு

    கேரளாவில் 3 பேருக்கும், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் தலா 2 பேருக்கும், டெல்டா பிளஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,. யூனியன் பிரதேசமான ஜம்முவிலும் ஒருவருக்கு இதே தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது,.

    உடனடி நடவடிக்கை

    உடனடி நடவடிக்கை

    டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றை மிகவும் கவலைக்குரிய தொற்று வகையாக மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. இந்த தொற்று பாதிப்பு உள்ள மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    டெல்டா எப்படி

    டெல்டா எப்படி

    டெல்டா பிளஸ் எப்படி வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக கொரோனா தொற்றின் முதல் அலையில் மரபணு மாறுபாடுகள் பெரிதாக பிரச்சனைகளை ஏற்படுத்தவில்லை, ஆனால் மரபணு மாற்றம் அடைந்த ஆல்பா, பீட்டா, டெல்டா வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் இரண்டாவது அலையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் டெல்டா வகை வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது மிகவும் ஆபத்தான இந்த வைரஸ் காரணமாகவே பலரும் உயிரிழக்க நேரிட்டது. பாதிப்பும் அதிகமாக இருந்தது. இந்த சூழலில் அதைவிட சக்தி வாய்ந்த மரபணு மாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு மாநிலங்களை உடனே எச்சரித்துள்ளது.

    மரபணு மாற்றம்

    மரபணு மாற்றம்

    'டெல்டா பிளஸ்' மாறுபாடு என்பது மிகவும் ஆக்ரோஷமான B.1.617.2, என்ற டெல்டா வகையின் அடுத்த வெர்சன் ஆகும். .

    'டெல்டா பிளஸ்' மாறுபாட்டை B.1.617.2.1, அல்லது AY.1 என அடையாளப்படுத்தி உள்ளனர். இது COVID-19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV2 வைரஸின் ஸ்பைக் புரதத்தில் K417N பிறழ்வால் இப்படி வகைப்படுத்தப்படுகிறது.

    கடுமையாக பரவும்

    கடுமையாக பரவும்

    ஸ்பைக் புரதம் என்பது வைரஸ் மனித உயிரணுக்களுக்குள் நுழையவும் பாதிக்கவும் உதவுகிறது, மேலும் K417N பிறழ்வு நோயெதிர்ப்பில் இருந்து வைரஸை தப்பிக்க உதவும் அல்லது அந்ந மருந்தை ஏய்ப்பதிலும் தொடர்பு உடையது. இது தடுப்பூசிகள் அல்லது எந்தவொரு மருந்து சிகிச்சையிலும் எளிதில் கட்டுப்பாடாத நிலை ஏற்படலாம் நோயெதிர்ப்பு சக்திகளிடம் இருந்து தப்பிகள் திறன் உடைய இந்த வைரஸ்களால் மிகவும் கடுமையான தொற்றுநோய்கள் ஏற்படலாம். மிகவும் ஆக்ரோஷமாக பரப்பும் திறனும் உடையவை ஆகும், தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மொத்தம் நாடு முழுவதும் 48 பேருக்கு இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 பேருக்கு இருப்பது மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    48 cases of the 'delta plus' variant of COVID-19 spread across 10 states and one Union Territory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X