Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படி போடுங்க.. புதுசா வருகிறது 50 ஏர்போர்ட்! அறிவித்த நிர்மலா சீதாராமன்! அதானி என எதிரொலித்த கோஷம்

நாடு முழுவதும் 50 விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பின், எதிர்க்கட்சிகள் அதானிக்காக அமைக்கப்படுகிறதா என்று முழக்கமிட்டனர்.

நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

50 New Airports will be setup across the country says Nirmala Sitharaman

அவை, ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் சிறிய நகரங்களையும் இணைக்கும் வகையில் 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர், புதிய விமான நிலையங்கள் அதானிக்காக அமைக்கப்படுகிறதா என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+