உச்ச நீதிமன்றத்தையும் விடாத... கொரோனா 2ஆம் அலை.. வீட்டிலிருந்து வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள்
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதிகள் வீட்டிலிருந்தபடியே வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா பரவல் மிக மோசமாக உள்ளது. இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் சுமார் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற வளாகம் தற்போது மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நீதிபதிகள் குடியிருப்புகளில் இருந்தபடியே வழக்குகளை விசாரணை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நீதிமன்ற ஊழியர்களும் எழுத்தர்களுக்குமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை நீதிபதிகள் யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்ட போதும், நீதிமன்றங்கள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு வீடுகளில் இருந்தே நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை நடத்தினார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications