ஓமிக்ரானால் நாடு முழுவதும் 578 பேர் பாதிப்பு - 19 மாநிலங்களில் பரவியுள்ளது
ஓமிக்ரான் தொற்றினால் நாடு முழுவதும் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஓமிக்ரான் பரவியுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் ஓமிக்ரான் தொற்றினால் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 151 பேர் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் ஓமிக்ரான் பரவியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஆகிய நாடுகள் ஓமிக்ரான் வைரஸின் பிடியில் சிக்கியுள்ளன. சிலர் உயிரிழந்துள்ளனர்.
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியா அமல்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் கட்டாய தனிமையில் வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா தொடங்கி 19 மாநிலங்களில் ஓமிக்ரான் பரவியுள்ளது. நாடு முழுவதும் 578 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 141 பேரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 151 பேர் குணமடைந்துள்ளனர்.
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடாகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. டெல்லியில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications