பிரதமரின் வீட்டு வசதி திட்டம்.. தமிழகத்தில் 6 லட்சத்து 21 ஆயிரம் வீடுகள்.. அறிய வேண்டிய மேஜர் விஷயம்
டெல்லி: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை மையமாக கொண்டு பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 609 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு, ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் என்ற பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு தலா ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.30 வரை மானியம் வழங்கி வருகிறது. மீதி தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்குகின்றன.

இந்நிலையில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்படி கடந்த மாதம் 5-ந்தேதி வரையிலான நிலவரப்படி மாநிலங்கள் வாரியாக கட்டுவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் 2 கோடியே 94 லட்சத்து 63 ஆயிரத்து 337 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 2 கோடியே 64 லட்சத்து 43 ஆயிரத்து 972 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 37 லட்சத்து 98 ஆயிரத்து 404 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 36 லட்சத்து 66 ஆயிரத்து 197 வீடுகள் கட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமான வீடுகள் மத்திய பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்படி கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிகிறது.
மத்திய பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக பீகாரில் 37 லட்சத்து 867 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 36 லட்சத்து 59 ஆயிரத்து 827 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பீகாருக்கு அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் 36 லட்சத்து 12 ஆயிரத்து 499 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 35 லட்சத்து 90 ஆயிரத்து 229 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 45 லட்சத்து 69 ஆயிரத்து 276 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 34 லட்சத்து 14 ஆயிரத்து 321 வீடுகளும் கட்டப்பட்டிருக்கிறது.
குஜராத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 9 ஆண்டுகளில் மொத்தம் 14 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன, இதில் நகர்ப்புறத்தில் 8.68 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிராமங்களில் 5.57 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8,46,931 வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் 7 லட்சத்து 41 ஆயிரத்து 469 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 609 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அளவில் மிகவும் குறைவாக லட்சத்தீவில் 53 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, வெறும் 45 வீடுகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு கட்ட முடியாதவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் சொந்த வீடு கட்ட முடியும். வீடற்ற குடும்பமாக இருப்பவர்கள் . ஒன்று அல்லது இரண்டு அறைகள், கச்சா சுவர்கள், கச்சா கூரை கொண்ட குடும்பங்கள்,
25 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவற்ற குடும்பம். 16 முதல் 59 வயது வரையிலான வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பம், 16 முதல் 59 வயது வரை வயது வந்த உறுப்பினர்கள் இல்லாத குடும்பம், உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டவர்கள், நிலமற்ற குடும்பங்கள், சாதாரண வேலை மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மற்றவர்கள், சிறுபான்மையினர் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதியுதவி பெறலாம். விண்ணப்பிக்கும் நபர் பெயரில் நிரந்தர வீடு இருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.03 லட்சம் முதல் ரூ.06 லட்சம் வரை இருக்க வேண்டியது கட்டாயம். விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டில் இருக்க வேண்டும். ஆதார் அட்டை அல்லது ஆதார் எண், உங்கள் புகைப்படம், பயனாளியின் வேலை அட்டை அல்லது வேலை அட்டை எண், வங்கி பாஸ் புத்தகம், ஸ்வச் பாரத் மிஷன் (SBM) பதிவு எண், கைபேசி எண் ஆகியவை கொண்டு பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைனில் ( https://pmaymis.gov.in ) விண்ணப்பிக்கலாம்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications