6 புதிய ஆளுநர்கள் நியமனம்: சிபி ராதாகிருஷ்ணன் உள்பட 3 கவர்னர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம்
டெல்லி: 6 புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 3 கவர்னர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர், சிக்கிம், அசாம், ஜார்க்கண்ட் உள்பட 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த் சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவித்தார். எனினும் ஜனாதிபதி அவரது ராஜினமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், பஞ்சாப் மாநில ஆளுநராக நீடித்து வந்தார்.

அதேபோல, தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா - புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்புகள் கூடுதலாக வழங்கப்பட்டு இருந்தது.
இப்படி ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களின் பொறுப்பை சில ஆளுநர்கள் கவனித்து வந்ததால் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆளுநர்கள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 புதிய ஆளுநர்களை நியமனம் செய்துள்ளார். 3 மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பன்வாரிலால் புரோகித் ராஜினாமாவையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து பஞ்சாபின் புதிய கவர்னராக அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்னன், மகராஷ்டிர ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
* ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாபு கிசன் ராவ் நியமனம்.
* தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா நியமனம்.
* சிக்கிம் ஆளுநராக ஒம்பிரகாஷ் மாத்தூர் நியமனம்.
* ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் நியமனம்.
* சத்தீஷ்கர் மாநில புதிய ஆளுநராக ரமேன் டெகா நியமனம்.
* மேகாலயா ஆளுநராக சி ஹெச் விஜய் சங்கர் நியமனம்.
* ஜார்க்கண்ட் , தெலுங்கானா, புதுவை மாநில ஆளுநராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம்.
* அசாம் மாநில ஆளுநராக லக்ஷ்மன் பிரசாத் ஆச்சர்யா நியமனம்- மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பு.
* அசாம் மாநில ஆளுநராக இருந்த குலாம் சந்த் கட்டாரியா, பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம்.
* பஞ்சாப் மாநில ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
* புதுவை துணை நிலை ஆளுநராக கைலாசாநாதன் நியமனம்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications