Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 60% பாகிஸ்தானியர்கள்! - இந்திய ராணுவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த ஆண்டு இந்தியாவுக்குள் ஏராளமான ஊடுருவல் முயற்சிகள் நடந்திருப்பதாகவும் அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்திருக்கிறது. இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானியர்கள் என்றும் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

எல்லையில் கொலை எவ்வளவு?: இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கி டிச.30 வரை மொத்தம் 75 பேர் ஊடுருவல்காரர்களாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 60% பேர் அதாவது 45 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று ராணுவம் கூறியிருக்கிறது. எல்லையில் ஏறத்தாழ தினமும் ஊடுருவல் முயற்சிகள் நடக்கிறது என்றும், இதன் காரணமாக ராணுவம் தீவிரமான கண்காணிப்பில் இருக்கிறது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

jammu and kashmir pakistan army

என்ன பிரச்னை?: ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தனக்கு சொந்தமானது என்று கொண்டாடுகிறது. ஆனால் இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த முயற்சிகளை ராணுவ ரீதியாக செய்தால் சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாக வேண்டி வரும். எனவே ஊடுருவல்காரர்களை அனுப்பி நாச வேலைகளை செய்து வருகிறது.

பாகிஸ்தானின் நிலை: பாகிஸ்தான் இப்போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொருளாதாரத்தில் பலமானதாக இல்லை. ஆனால் இந்த நிலையிலும் கூட, இந்தியாவில் ஊடுருவலை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், முன்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த இளைஞர்களை மூளை சலவை செய்து பயன்படுத்தி வந்தது. ஆனால், இந்த முறை இப்படியான மூளை சலவைகள் குறைந்திருப்பதாக ராணுவம் கூறியிருக்கிறது.

இந்த முறை ஜம்முவின் ரஜோரி, பூஞ்ச், தோடா, கிஷ்த்வார், கதுவா மற்றும் ரியாசி ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் ராணுவம் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் திட்டம்: ஊடுருவல்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட மறுபுறும், தனது ராணுவத்தை பலப்படுத்தும் பணியில் அந்நாடு இறங்கியுள்ளது. குறிப்பாக சீனாவிடமிருந்து 5ம் தலைமுறை போர் விமானங்களை வாங்க இருக்கிறது. இது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஏனெனில் இந்தியாவிடம் இப்போது வரை 5ம் தலைமுறை விமானங்கள் கிடையாது. நம்மிடம் இருக்கும் அதிநவீன ரஃபேல் விமானம் கூட 4.5ம் தலைமுறையை சேர்ந்ததுதான். எனவேதான் இந்தியாவுக்கு பாகிஸ்தானின் நடவடிக்கைகள் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவற்றை சீனா கைக்குள் போட்டு வைத்திருக்கிறது. இப்போது, பாகிஸ்தானையும் கைக்குள் போட்டுக்கொண்டால் இந்தியா தனியாக விடப்படும். ஆக பாகிஸ்தானின் ஊடுருவலுக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+