9 ஆண்டில் உலகளவில் இந்தியாவின் இமேஜை மோடி உயர்த்தினாரா? சிவோட்டர் கருத்து கணிப்பு ரிசல்ட் இதுதான்
டெல்லி: பிரதமராக 9 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நரேந்திர மோடி உலகளவில் இந்தியாவின் இமேஜை உயர்த்தினாரா? இல்லையா? என்பது குறித்து சி வோட்டர் கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பின் பரபரப்பான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
மத்தியில் 2014 வரை காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதன்மூலம் மத்தியில் 2014 முதல் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

2014ல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அதன்பிறகு 2019 ல் 2வது முறையாக மோடி பிரதமராகி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையை படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான பணியை இப்போதே பாஜக தொடங்கிவிட்டது. அதேபோல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை காங்கிரஸ் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த கருத்து கணிப்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சி திருப்தியாக உள்ளதா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு திருப்திகரமாக இருப்பதாக 73.02 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு பதில் என்பது கடந்த 2021 கருத்துக்கணிப்பில் 62.05 சதவீதமாகவும், 2022 கருத்துக்கணிப்பில் 82.96 சதவீதமாகவும் இருந்தது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது ஓட்டு சதவீதம் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இருப்பினும் ஏறக்குறைய கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசி பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதிலளித்துள்ளது பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த 9 ஆண்டில் உலகளவில் பிரதமர் மோடி இந்தியாவை சிறப்பான முறையில் முன்னிறுத்தியதில் வெற்றி பெற்றுள்ளார் என 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதற்கு நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 58.3 சதவீதம் பேரும், கிராமங்களில் வசிக்கும் மக்களில் 61.4 சதவீதம் பேரும் பிரதமர் மோடி உலகளவில் இந்தியாவை சிறப்பான முறையில் முன்னிறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
மாறாக இந்தியாவை உலக வல்லரசாக முன்னிறுத்துவதில் இருந்து பிரதமர் மோடி தவறிவிட்டார் என முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர் எனவும், 56 சதவீத முஸ்லிம்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாகவும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு ஐந்து இந்தியர்களில் மூன்று பேர் பிரதமர் மோடி வலிமையான முடிவுகளை எடுப்பதாக கருதுவதாக சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications