60 வயது.. தோழியை திருமணம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக்
டெல்லி: 60 வயதாகும், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முகுல் வாஸ்னிக், தனது நீண்டகால தோழியான ரவீணா குரானாவை, திருணம் செய்துள்ளார்.
மன்மோகன் சிங் அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தில் சமூக நீதித்துறை அமைச்சராக முகுல் வாஸ்னிக் பதவி வகித்தார். 2009 இல் மகாராஷ்டிராவின் ராம்தேக் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக உள்ளார். குடும்பமே காங்கிரஸ் ரத்தம்தான். ஏனெனில், இவரது தந்தை பாலகிருஷ்ணா வாஸ்னிக் மூன்று முறை காங்கிரஸ் எம்.பி.யாக பதவி வகித்தவர். 1984 ஆம் ஆண்டில், தனது 25 வயதில், புல்தானா மக்களவைத் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.பி. ஆனார்.

ரவீணா குரானா
ரவீணா குரானா, டெல்லியைச் சேர்ந்த, ஒரு தொழிலதிபராகும். இவருக்கும் 60 வயது ஆகிறது. தொழிலதிபர் என்பதை தாண்டி, அரசியல்வாதிகளிடையே லாபி செய்ய கூடிய அளவுக்கு அரசியலில் வலிமையானவராம். இவரும், முகுல் வாஸ்னிக்கும், நீண்டகால நண்பர்கள். எனவே திருமணம் செய்ய முடிவு செய்து, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ஆகியோரும் வந்திருந்தனர்.

சீனியர்கள்
திருமணத்தில் காங்கிரஸ் சீனியர்கள், அம்பிகா சோனி, பி.கே.ஹரிபிரசாத், ஆனந்த் சர்மா ஆகியோரும் வந்தனர். கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்த பின்னர், காங்கிரஸ் தலைவராக வருவார் என்ற ஊகங்களில் அடிபட்ட பெயர்களில், முகுல் வாஸ்னிக் பெயரும் ஒன்றாகும். இப்போதும் கூட அந்த பதவியில் அமரும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். ராகுல் காந்தி ஒருவேளை தலைவர் பதவிக்கு திரும்பாவிட்டால், சோனியா அந்த முடிவுக்குத்தான் செல்வார் எனக் கூறப்படுகிறது.
|
புதிய துவக்கம்
அவர்களது திருமணம் குறித்த தகவல்களை ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெஹ்லோட் டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். 'தம்பதிகளாக ஒன்றாக வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த, முகுல் வாஸ்னிக் மற்றும் ரவீனா குரானா ஜி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நேரமாக இருக்கும் என்று நம்புகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். ' இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இளைஞர்கள்
முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி ட்விட்டரில் இதுபற்றி கூறுகையில், 'புதிய மணமகன், மணமகளான முகுல் வாஸ்னிக் மற்றும் ரவீனா குரானா ஆகியோரை வாழ்த்துவது எனக்கும் நஸ்னீனுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலக இளைஞர் மற்றும் மாணவர் விழாவிற்கு நாங்கள் அனைவரும் மாஸ்கோ சென்றபோது 1984ல் முகுல் வாஸ்னிக் மற்றும் 1985இல் ரவீனாவை சந்தித்தேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். ' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications