ராஜ்யசபா தேர்தல்.. 7 அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்காத பாஜக.. பிளான் என்ன தெரியுமா?
டெல்லி: ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் 7 அமைச்சர்களுக்கு பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. இந்த பட்டியலில் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்களும் உள்ளனர். இவர்களுக்கு பாஜக ஏன் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள 56 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப படிவம் தாக்கல் 8 ஆம் தேதியே தொடங்கியது. இன்றுடன் வேட்பு மனு தாக்கலுக்கான அவகாசம் முடிவடைய உள்ளது.

ராஜ்ய சபா உறுப்பினர்கள் 56 பேரின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதில், இதில், பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் 28 பேர் ஆவர். இந்த 28 பேரில் 4 பேருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி இருக்கிறது. பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் எல் முருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவிலிருந்து போட்டியிடுகிறார். மத்திய பிரதேசத்தில் 5 இடங்கள் காலியாக உள்ளன. இதில், மத்திய இணையமைச்சர் எல். முருகன், உமேஷ் நாத் மஹராஜ், மாயா மரோலியா மற்றும் பன்சிலால் குர்ஜார் ஆகிய 4 பேர் பாஜக சார்பில் போட்டியிட உள்ளனர்.
7 அமைச்சர்கள் போட்டியில்லை: குஜராத் மாநிலத்திலிருந்து பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா, கோவிந்த்பாய் தொலாக்கியா, மயாங்க்பாய் நாயக் மற்றும் டாக்டர் ஜஷ்வந்த் சிங்பார்மர் ஆகிய 4 பேர் போட்டியிட உள்ளார்கள். அதே போல் தற்போது அமைச்சர்களாக இருக்கும் 7 பேர் மீண்டும் ராஜ்யசபா எம்பி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா (குஜராத்), கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (மத்திய பிரதேசம்) தகவல் தொழில் நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), சுற்றுலாத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்), மீன் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா (குஜராத்) சிறு குறு நிறுவனங்களுக்கான அமைச்சர் நாராயணன் ரானே மற்றும் வெளியுறவு இணை அமைச்சர் வி முரளிதரன் ஆகிய 7 அமைச்சர்களும் போட்டியிடவில்லை.
லோக்சபா தேர்தலில் போட்டியா?: இதனால், இந்த ஏழு அமைச்சர்களும் லோக்சபா தேர்தலில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைசர் தர்மேந்திர பிரதான் தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் உள்ள சம்பல்பூர் அல்லது தேக்னல் ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாம். அதேபோல், பூபேந்திர யாதவ் ராஜஸ்தானின் அல்வார் அல்லது மகேந்திரகார் ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.
கேரளாவில் யார்?: அதேபோல், ராஜீவ் சந்திரசேகர் பெங்களூரில் உள்ள 4 லோக்சபா தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. அதேபோல், மன்சுக் மாண்டவியா தனது மாநிலமான குஜராத்தின் பாவ்நகர் அல்லது சூரத் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராரம். ருபாலாக்கு ராஜ்கோட் தொகுதி கிடைக்கும் என்றும் முரளிதரன் கேரளாவில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. பாஜகவுக்கு கேரளாவில் பெரிய அளவு செல்வாக்கு இல்லை. இதனால், அங்கு பாஜக கரை தேறிவருவது கொஞ்சம் சவாலான விஷயம்தான்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications